wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிப் புதிர் 2

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாக்கியத்தில் பொருத்தமான பழமொழியை நிறைவு செய்க.

பல விடயங்களைத் தன் நுனி விரலில் அறிந்து வைத்திருந்த இளவழகன் ____________________________ என்பதற்கொப்ப சிறந்த மேதையாக விளங்கினான்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

2.

வாக்கியத்தில் பொருத்தமான பழமொழியை நிறைவு செய்க.

இளமதி எவருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன் சுய உழைப்பின் மூலம் ________________________ என்பதற்கொப்ப தன் குடும்பத்தை நன்முறையில் நடத்தி வருகிறாள்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

c)

தன் கையே தனக்கு உதவி

3.

பழமொழிக்கேற்ற பொருளை தெரிவு செய்க.

கண்டதைக் கற்க பண்டிதனாவான்.

a)

பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களைக் கற்பவரே சிறந்த அறிஞராகத் திகழ்வர்.

b)

உற்று நோக்கி அறிந்து கொள்பவர்களே அறிவாளிகளாகத திகழ்வர்

c)

பிறரிடம் உதவியை எதிர்பார்த்து நிற்காமல் தாமாகவே உழைக்க வேண்டும்.

4.

பழமொழிக்கேற்ற பொருளை தெரிவு செய்க.

தன் கையே தனக்கு உதவி.

a)

பிறரிடம் உதவியை எதிர்பார்த்து நிற்காமல் தாமாகவே உழைக்க வேண்டும்.

.

b)

நம் கையைக் கொண்டே நாம் நமக்கு உதவிக்கொள்ள வேண்டும்

c)

கண்டவற்றை உற்று நோக்கி அறிந்து கொள்பவர்களே அறிவாளிகளாகத் திகழ்வர்

5.

பழமொழிக்கேற்ற பொருளை தெரிவு செய்க.

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்.

a)

தன் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

b)

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்

c)

பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களைக் கற்பவரே சிறந்த அறிஞராகத் திகழ்வர்

6.

பழமொழிக்கேற்ற பொருளை தெரிவு செய்க.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.

a)

தன் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

b)

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும் .

c)

பிறரிடம் உதவியை எதிர்பார்த்து நிற்காமல் தாமாகவே உழைக்க வேண்டும்.

7.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

கபிலன் நிர்வாகி கொடுக்கும் எந்தவொரு வேலையையும் முறையாகச் செய்து முடிக்காமால், எப்போதும் மற்றவரைக் குறை கூறி திரிவான்.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

c)

தன் கையே தனக்கு உதவி

8.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

கோபாலன் தான் இழந்த சொத்துகளைத் தனது சுய முயற்சியில் மீட்கப் பட்டணத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டான்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

9.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நளினி எப்பொழுதும் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்காமல் மற்றவர் மீது பழி சுமத்துவாள்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

10.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நளினி எப்பொழுதும் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்காமல் மற்றவர் மீது பழி சுமத்துவாள்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

c)

தன் கையே தனக்கு உதவி

11.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

மலர்விழி பல துறை சார்ந்த நூல்களைக் கற்றதால் இப்பொழுது சிறந்த நிலையில் இருக்கின்றாள்.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்