Worksheetsஅறிவியல் ஆண்டு 4(மீள்பார்வை)24.06.2020
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் கூற்று எந்த அறிவியல் செயற்பாங்கினைக் காட்டுகிறது?
"கருத்த வானம்; பலத்த காற்று; மின்னல் பளீச் பளிச் என மின்னியது"
அடுத்த என்ன நடைபெறும் என மாணவர்கள் சிந்தனை செய்தனர்?
அனுமானித்தல்
தொடர்பு கொள்ளுதல்
ஊகித்தல்
உற்றறிதல்
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான அறிவியல் செயற்பாங்கு எது?
" காந்தப் பொருள்களைக் காந்தம் ஈர்க்கும்"
உற்றறிதல்
செயல்நிலை வரையறை
ஊகித்தல்
கருதுகோள் உருவாக்குதல்
கீழ்க்காண்பனவற்றுள் கழிகவற்றும் உறுப்பைத் தேர்ந்தெடுத்திடுக.
மூக்கு
சுவாசக்குழாய்
நுரையீரல்
இருதயம்
ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் "ஹார்ன்" சத்தத்தைக் கேட்டு உடனே விலக முடியவில்லை. ஏன்?
அவருக்குக் காது கேட்கவில்லை
அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்
அவர் உறங்கிவிட்டார்
அவர் வேண்டுமென்றே நகர மறுக்கிறார்
ஈருலக விலங்குகள்,மற்ற விலங்குகளைக் காட்டிலும் சிறப்புத் தன்மை கொண்டிருக்கின்றன. அந்தத் தன்மை என்ன?
நீண்ட நாள் உயிர் வாழும்
அதிகமான முட்டைகள் இடும்
நீரிலும் நிலத்திலும் வாழ முடியும்
மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிகப் பாதுகாப்புடன் வாழும்
தாவரத்தின் தளிர்ப் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகிறது?
நீர்
புவி ஈர்ப்புச் சக்தி
சூரிய ஒளி
தொடுதல்
தாவரத்தின் ஒளிச்சேர்க்கை வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர். ஒன்றினைத் தவிர.
உயிர்வளி
உணவு
வசிப்பிடம்
கரிவளி
திமிங்கிலம் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கும் ஒரு விலங்காகும்.இருப்பினும் திமிங்கிலத்தால் எப்படி நீரில் வாழ முடிகிறது?
திமிங்கிலத்திற்குச் செவுள் உள்ளது
திமிங்கிலம் சுவாசிக்கும் போது நீரின் மேல் மட்டத்திற்கு வரும்
திமிங்கிலம் நீரில் உள்ள உயிர்வளியை ஈர்த்துக் கொள்ளும்
திமிங்கிலம் ஈருலக விலங்கு என்பதால் அதற்கு இரு வகை சுவாச உறுப்புகள் உள்ளன
சாலமண்டர் நீரில் இருக்கும்போது எப்படிச் சுவாசிக்கும்?
செவுளைக் கொண்டு
ஈரமான தோலைக் கொண்டு
நுரையீரலைக் கொண்டு
சுவாசத் துளையைக் கொண்டு
மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்றில் _______________________________ உயிர்வளியும் _____________________ கரிவளியும் இருக்கும்.
குறைவான, அதிகமான
அதிகமான, அதிகமான
அதிகமான, குறைவான
குறைவான, குறைவான
