NEW
Font size
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 10
Worksheet time: 5mins
(என்) அடிக்கோலை நீ பார்த்தாயா என்று கேட்டாள் அமுதா.
என்னின்
எனது
என்னுள்
என்னால்
இக்கணக்கின் விடையை (ஆசிரியர்) சென்று கேள் என்றான் இராமன்.
ஆசிரியருடைய
ஆசிரியரின்
ஆசிரியரிடம்
ஆசிரியரது
"இராமன் இங்கே வா "என்று (அவன்) தந்தை அவனை உரக்கக் குரலில் அழைத்தார்.
அவனுக்கு
அவன்பால்
அவனுடைய
அவனின்
(அவன்) புத்தகத்தைத் தான் எடுக்கவில்லை என்றான் குமரன்.
அவனது
அவனை
அவனின்
அவனுக்கு
அந்த புத்தகத்தை யார் (அவள்) கொடுத்தது?
அவளுக்கு
அவளது
அவளுடைய
அவளிடம்
அவளிடம் உள்ள இரண்டு (பேனா) ஒன்று என்னுடையது.
பேனாவை
பேனாவின்
பேனாவுக்கு
பேனாக்களில்
(மகள்) நீ நல்ல நூள்களையே படிக்க வேண்டும் என்றாள் தாய்.
மகளை
மகளே
மகளுக்கு
மகளது
"அரசே நான் அக்(குற்றம்) புரியவில்லை, என்னை விட்டுவிடுங்கள்" என்று மன்றாடினான் ஒற்றன்.
குற்றத்தின்
குற்றம்
குற்றத்தை
குற்றத்திற்கு
மற்றவர்களுக்கு உதவி செய்வதும் (அவன்) நற்பழக்கங்களில் ஒன்றாகும்.
அவனை
அவனுக்கு
அவனது
அவனின்
தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டது ( அவன்) பெருந்தன்மையாகும்.
அவனது
அவனை
அவனுடைய
அவனுக்கு
