wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு (தவணை 3)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மல்லிகைப் பூவின் __________ சிலருக்குத் தலைவலியை உண்டாக்கும். அதனால், அவர்கள் அதை வாங்கமாட்டார்கள்.

a)

மனம்

b)

மணம்

2.

சுமதி திடலில் விளையாடிய போது அவளுடைய வெள்ளைச் சட்டையில் ___________படிந்துவிட்டது. துவைக்கும்போது அதைப் போக்குமாறு அவள் தன் அம்மாவிடம் கூறினாள்.

a)

கரை

b)

கறை

3.

மாமா, சுவரில் மாட்டுவதற்கு ஓர் அழகான படத்தை வாங்கி வந்தார். ஆனால், அவர் அதன் ____________ எவ்வளவு என்று எங்களிடம் கூற மறுத்துவிட்டார்.

a)

விலை

b)

விளை

4.

மாணவர்கள் ______________ அருகே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது ஆபத்தானது என்று ஆசிரியர் அறிவுரை கூறி அவர்களை அங்கிருந்து போகச் சொன்னார்.

a)

ஏரி

b)

ஏறி

5.

எனக்கு அஞ்சலில் வாழ்த்து அட்டை ஒன்று வந்தது. நான் உடனே _________கிழித்து வாழ்த்து அட்டையைப் படித்து மகிழ்ந்தேன்.

a)

உரையை

b)

உறையை

6.

அன்பன் கல் தடுக்கிக் கீழே விழுந்தான். நல்ல __________! அவனுக்குப் பலமான காயம் ஏதும் ஏற்படவில்லை.

a)

வேலை

b)

வேளை

7.

ரதி பொது விடுமுறையை மகிழ்ச்சியுடன் ___________ விரும்பினாள். எனவே, நரியின் பெற்றோர் அவளைச் செந்தோசாத் தீவுக்கு அழைத்துச் சென்றனர்.

a)

கழிக்க

b)

களிக்க

8.

மாலா மற்றவர்களுக்கு உதவும் ______________ உடையவள். அதனால் அவளுக்கு நெருங்கிய தோழிகள் பலர் உள்ளனர்.

a)

தண்மை

b)

தன்மை

9.

என் தம்பி மாம்பழம் சாப்பிட விரும்பினான். அவன் என் தாயாரிடம் அதை ______ கொடுக்கச் சொன்னான்.

a)

அரிந்து

b)

அறிந்து

10.

டிசம்பர் மாதத்தில் எங்களுடைய உறவினரைப் பார்க்க நாங்கள் இங்கிலாந்து சென்றிருந்தோம். அங்கே வீடுகளின் கூரைகளில் _____________பொதிந்துள்ள காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.

a)

பனி

b)

பணி