wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு ( 10.7.2020)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாயாவின் விலையுயர்ந்த மோதிரம் வீட்டில் தொலைந்துவிட்டது. ,அதனால் .அவள் தன் வீட்டு __________ முடுக்குகளில் அதைத் தேடினாள்.

a)

மூலை

b)

மூளை

2.

சிறுவர் தினக் கொண்டாட்டத்திற்காக ஆசிரியர் படைக்கும் அங்கத்தைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். மேடையில் __________________ விலகியதும், கலைநிகழ்ச்சி தொடங்கியது.

a)

திறை

b)

திரை

3.

போன வாரம் என் வீட்டிற்கு எதிரே உள்ள கடையில் தீப்பற்றிக்கொண்டது. தீயணைப்பாளர்கள் அத்தீயை _____________ மின்னல் வேகத்தில் வந்தனர்.

a)

அணைக்க

b)

அனைக்க

4.

ஆசிரியர் கற்றல் பயணத்திற்கான பேருந்து கட்டணத்தை மாணவர்களை எடுத்துவரச் சொன்னனார். மாலதி அதற்கு உரிய பணத்தை ஒரு கடித ________ வைத்து ஆசிரியரிடம் கொடுத்தாள்.

a)

உறையில்

b)

உரையில்

5.

டிசம்பர் விடுமுறையில் பாலா தாய்லாந்துக்குச் செல்ல இருக்கிறான். அவன் தனக்குத் தேவையான ____________ பொருள்களையும் பயணப்பெட்டியில் எடுத்து வைக்கிறான்.

a)

அணைத்து

b)

அனைத்து

6.

அன்று தமிழ்ப் புத்தாண்டு. என் பாட்டி வீட்டு வாசலில் அழகிய ____________ ஒன்றைப் போட்டு அசத்தினார்.

a)

கோலம்

b)

கோளம்

7.

ரவி எப்போதும் போல் வீட்டுப்பாடத்தைச் செய்யவில்லை. கோபமடைந்த ஆசிரியர், அவனுடைய தாயாரின் கைத்தொலைபேசி ____________ குறித்துக் கொண்டார்.

a)

என்னை

b)

எண்ணை

8.

அம்மா ஓர் அழகான கறுப்பு நிறக் கைப்பையை வாங்கினார். அதன் ____________ மிகவும் மிருதுவாக இருந்தது.

a)

தோள்

b)

தோல்

9.

தம்பி மிகவும் பசியுடன் இருந்தான். அம்மா _____________ கோழியை அவன் உண்டு மகிழ்ந்தான்.

a)

பொரித்த

b)

பொறித்த

10.

நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். அதனால், கொழுப்பு நிறைந்த உணவுகளை _____________ சாப்பிட வேண்டும்.

a)

குரைத்து

b)

குறைத்து