Worksheets16.7.2020
Total questions: 18
Worksheet time: 9mins
சிறுவர்கள் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த ______________ மீது ஏறிச் சவாரி செய்தனர்.
கறி
கரி
திரு ராமனுக்கு அலுவலகத்தில் ____________ கடினமாக இருந்தது. அதனால் அவர் களைப்பாகக் காணப்பட்டார்.
வேலை
வேளை
போரில் வீரன் சண்டையிட்டுக்கொண்டிருந்தான். அப்போது அவனுடைய வில்லின் ______________ அறுந்தது.
நான்
நாண்
ஆசிரியர் வகுப்பில் ஒரு பொம்மலாட்டக் காட்சியைக் காட்டினார். அவர் ______________ ஒன்றைக் கட்டி அதற்குப் பின்னால் பொம்மைகளை வைத்து கதை சொன்னார்.
திறை
திரை
வினோத் ஒரு கோபக்காரச் சிறுவன். அவன் அக்காவின் மீது கோபப்படும்போதெல்லாம் அவர் _______________ போவார்.
பொறுத்து
பொருத்து
பள்ளி விடுமுறை அன்று குமுதா பூங்காவில் மிதிவண்டி ஓட்டச் சென்றாள். அங்கே பறந்துகொண்டிருந்த ______________ ஒன்று அவளைக் கொட்டியது.
குழவி
குளவி
பயங்கரவாதத் தாக்குதலின்போது நிறைய மக்கள் ______________ இன்றி தவித்தார்கள். அவ்வேளையில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டினார்கள்.
ஊண்
ஊன்
இவ்வருட இறுதி ஆண்டுத் தேர்வில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று ராமு தீர்மானித்தான். அதனால், அவன் அதிக ________________ எடுத்துத் தன் பள்ளிப் பாடங்களைப் படிக்கிறான்.
அக்கரை
அக்கறை
மாணவர்கள் பள்ளி உணவகத்தில் குளிர்பானம் ______________ சென்றனர். அவர்கள் அதை வாங்க வரிசையில் நின்றனர்.
அருந்த
அறுந்த
என் _____________ உயர்ந்த மடிக்கணினி கீழே விழுந்து உடைந்து விட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்தது.
விளை
விலை
அரசவையில் திருடன் ஒருவன் அகப்பட்டான். மன்னர் அவனைச் சிறையில் அடைக்கும்படி _____________ இட்டடார்.
ஆணை
ஆனை
மல்லிகா தினமும் உடற்பயிற்சி செய்தாள். அதனால் அவள் மூன்று மாதத்தில் உடல் _______________ காணப்பட்டாள்.
இளைத்து
இழைத்து
மன்னன், ஒற்றனை அண்டை நாட்டிற்கு அனுப்பி___________________ பார்த்து வரச் சொன்னான். ஒற்றனும் தகவல்களை அறிந்து வந்தான்
உலவு
உளவு
உழவு
___________________ பெய்ய ஆரம்பித்ததும் விவசாயிகள் அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர். அவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்
மாரி
மாறி
நாம் _______________________ வளர்ச்சி குன்றிய மாணவர்களைப் பார்த்துப் பரிகாசம் செய்யக் கூடாது. அவர்களிடம் அன்பைக் காட்ட வேண்டும்.
மூளை
மூலை
சிங்கப்பூர் _____________ நிறைந்த நாடாகக் கருதப்படுகிறது. அதனால் பல நாடுகளிலிருந்து பலர் இங்கு வேலை வாய்ப்புத் தேடி வருகிறார்கள்.
வளம்
வலம்
ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் ____________ வரை
பொறுமையாகக் கற்றுக்கொடுத்தார்.
மாணவர்களும் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டனர்.
விளங்கும்
விலங்கும்
செல்வன் கீழே விழுந்த பூக்களைக் கைகளில் ______________ எடுத்துக் கூடையில் போட்டான். அப்பூக்களின் அழகைக் கண்டு
மகிழ்ந்தான்.
அல்லி
அள்ளி
