wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திரு. மாறன் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

c)

அங்கும் இங்கும்

d)

சுற்றும் முற்றும்

2.

நாம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி வாழும் சமுதாயமாகத் திகழ்வதில் பெருமை கொள்ள வேண்டும்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

c)

சுற்றும் முற்றும்

d)

அங்கும் இங்கும்

3.

சரியான இணை. ஒன்றைத் தவிர ...

a)

மறம் = வீரம்

b)

அறம் = தருமம்

c)

மனம் = வாசனை

d)

மெய் = உண்மை

4.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்ல வேண்டும்.

b)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக் கூடாது.

c)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயல வேண்டும்.

d)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.

5.

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக் கூடாது.

b)

நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயல வேண்டும்.

c)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.

d)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்ல வேண்டும்.

6.

திருமதி அபிராமியின் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

c)

கம்பி நீட்டுதல்

d)

செவி சாய்த்தல்

7.

பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரியும் முகிலன், சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று பகல் கனவு காண்கிறான்.

a)

தொன்று தொட்டு

b)

கிணற்றுத் தவளை

c)

மனக்கோட்டை

d)

முழுமூச்சு

8.

நெடுங்காலமாய் வைத்தியம் செய்து வரும் பார்கவியின் பாட்டி மிகவும் திறமைசாலி என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

a)

கம்பி நீட்டுதல்

b)

முழுமூச்சு

c)

மனக்கோட்டை

d)

தொன்று தொட்டு

9.

மாட் ஜெனின் எனும் வாலிபன் வெறும் கற்பனை உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு நேரத்தைக் கழித்தான்.

a)

தெள்ளத் தெளிதல்

b)

முழுமூச்சு

c)

மனக்கோட்டை

d)

தொன்று தொட்டு

10.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

d)

சிறு துளி பெரு வெள்ளம்.

11.

சுண்டெலியை அற்பமான உயிர் எனச் சிங்கம் நினைத்தது. ஆனால், சிங்கம் வலையில் சிக்கிக் கொண்டபோது சுண்டெலிதான் காப்பாற்றியது.

a)

நிறைகுடம் தளும்பாது.

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

c)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

d)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

12.

நண்பனின் கதைப்புத்தகத்தைக் கோகுலன் தொலைத்து விட்டான். அவன் அதனை எண்ணிப் பல நாட்கள் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்.

13.
a)

முக்காற்புள்ளி

b)

அரைப்புள்ளி

c)

காற்புள்ளி

d)

முற்றுப்புள்ளி

14.
a)

காற்புள்ளி

b)

அரைப்புள்ளி

c)

முக்காற்புள்ளி

d)

முற்றுப்புள்ளி

15.
a)

உணர்ச்சிக் குறி

b)

ஒற்றை மேற்கோள் குறி

c)

இரட்டை மேற்கோள் குறி

d)

வினாக்குறி

16.

சிலை மேல் எழுத்துப் போல

a)

மிகவும் நெருக்கமாக

b)

மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது

c)

துன்பம் நீங்குதல்

d)

மிகவும் பாதுகாப்பாக

17.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மிகவும் நெருக்கமாக

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது

d)

விட்டுப் பிரியாமை

18.

இயல்பு புணர்ச்சி. ஒன்றைத் தவிர ...

a)

மலர் வளையம்

b)

பூங்கொத்து

c)

கயல்விழி

d)

ஆணி வேர்

19.

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

a)

கல்வியைக் கற்றுக் கொடுக்கும் நண்பன் கடவுளுக்கு நிகராவான்.

b)

கல்வியைக் கற்றுக் கொடுக்கும் அப்பா கடவுளுக்கு நிகராவார்.

c)

கல்வியைக் கற்றுக் கொடுக்கும் அம்மா கடவுளுக்கு நிகராவார்.

d)

கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.

20.

சரியாக வலிமிகுந்துள்ளது. ஒன்றைத் தவிர ...

a)

பையைக் கொடு

b)

இதுப் புத்தகம்

c)

எந்தக் கதை?

d)

அங்குப் பார்