Worksheetsஏழாம் வகுப்பு தமிழ்
Total questions: 20
Worksheet time: 20mins
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
பச்சை இலை
கோலிக்குண்டு
பச்சைக்காய்
செங்காய்
ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது _____
காது
தந்தம்
கண்
கால்நகம்
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
வேடந்தாங்கல்
கோடியக்கரை
முண்டந்துறை
கூந்தன்குளம்
'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று அழைக்கப்படும் விலங்கு
யானை
சிங்கம்
புலி
கரடி
வாய்மை எனப்படுவது __
அன்பாகப் பேசுதல்
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
தமிழில் பேசுதல்
சத்தமாகப் பேசுதல்
_____ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
மன்னன்
பொறாமை இல்லாதவன்
பொறாமை உள்ளவன்
செல்வந்தன்
'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ____
அரை
ஒன்று
ஒன்றரை
இரண்டு
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ______
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம்
ஆய்தக் குறுக்கம்
'காடெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
காடு + டெல்லாம்
காடு + எல்லாம்
கா + டெல்லாம்
கான் + எல்லாம்
'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___
பெயர + றியா
பெயர் + ரறியா
பெயர் + அறியா
பெயர + அறியா
'மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___
மன + மில்லை
மனமி + இல்லை
மனம் + மில்லை
மனம் + இல்லை
'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____
காடு + ஆறு
காட்டு + ஆறு
காட் + ஆறு
காட் + டாறு
'அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____
அனைத்து + துண்ணி
அனை + உண்ணி
அனைத் + துண்ணி
அனைத்து + உண்ணி
'பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____
பொரு + செல்வம்
பொருட் + செல்வம்
பொருள் + செல்வம்
பொரும் + செல்வம்
'யாதெனின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____
யா + எனின்
யாது + தெனின்
யா + தெனின்
யாது + எனின்
'கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____
கிழங்குஎடுக்கும்
கிழங்கெடுக்கும்
கிழங்குடுக்கும்
கிழங்கொடுக்கும்
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____
நேற்றுஇரவு
நேற்றிரவு
நேற்றுரவு
நேற்இரவு
'வேட்டை + ஆடிய' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____
வேட்டைஆடிய
வேட்டையாடிய
வேட்டாடிய
வேடாடிய
'நேரம்+ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____
நேரமாகி
நேராகி
நேரம்ஆகி
நேர்ஆகி
தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____
தீதுண்டோ
தீதுஉண்டோ
தீதிண்டோ
தீயுண்டோ
