wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE FAIR YEAR 3 2020

Total questions: 20

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எந்த நடவடிக்கை அறிவியல் அறையில் செய்யக் கூடிய பாதுகாப்பான நடவடிக்கையாகும்?

a)

A. அறிவியல் அறையில் ஓடுதல்.

b)

B. வெப்பமான மேற்பரப்பைத் தொடுதல்

c)

C. அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்திய பின் கைகளைக் கழுவுதல்

d)

D. தரையில் ஊற்றப்பட்ட நீரைத் துடைக்காமல் இருத்தல்.

2.

மாணவர்கள், ஒரு கரண்டி புளிக்காடியையும் சிறிதளவு சமையல் சோடாவையும் ஒரு பாத்திரத்தில் கலந்தனர். உற்றறிந்தவற்றைக் குறிப்பெடுத்தனர். அவர்கள் உற்றறியும் போது தவிர்க்க வேண்டியது யாது?

a)

A. உலோகக் கரண்டியைப் பயன்படுத்துதல்

b)

B. கலவையைக் கலக்குதல்

c)

C. நெகிழி பாத்திரத்தைப் பயன்படுத்துதல்

d)

D. கலவையைச் சுவைத்தல்

3.

பின்வருவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் ஆகும்.

i உற்றறிதல்

ii முன் அனுமானித்தல்

iii வகைப்படுத்துதல்

iv ஊகித்தல்

a)

A i,ii,iii

b)

B i,ii,iv

c)

C ii,iii,iv

d)

D i,ii,iii,iv

4.

படம் ஓர் அறிவியல் செயற்பாங்கினைக் குறிக்கின்றது. அது யாது?

a)

A. உற்றறிதல்

b)

B. வகைப்படுத்துதல்

c)

C. முன் அனுமானித்தல்

d)

D. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

5.

அமலா தனது அறிவியல் புத்தகத்தின் நீளத்தை அளவெடுக்க எண்ணினாள்.



மேற்காணும் கூற்றின் படி, அமலா பயன்படுத்த வேண்டிய பொருள் யாது?

a)
b)
c)
d)
6.

இராமு ஒரு பந்தின் சுற்றளவை அளவிட எண்ணினான். அவன் பயன்படுத்த வேண்டிய பொருள் யாது?

a)

A. அடிக்கோல்

b)

B. நூல் மற்றும் அடிக்கோல்

c)

C. நிறுவை

d)

D. முகவை

7.

பின்வருவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறனான முன் அனுமானித்தைப் பற்றிய சரியான கூற்று?

a)

A. நடக்கவிருக்கும் செயல்களைக் கூறும் திறன்

b)

B. நடந்து முடிந்த செயல்களைக் கூறும் திறன்

c)

C. நடந்து கொண்டிருக்கும் செயல்களைக் கூறும் திறன்

d)

D. ஏற்படக்கூடுய சாத்தியம் இல்லாத ஒரு செயலைக் கூறும் திறன்

8.

பின்வருவனவற்றுள் எது பால் பற்களைப் பற்றிய தவறான கூற்று?

a)

A. மொத்த பற்களின் எண்ணிக்கை 20

b)

B. சிறியதாக இருக்கும்

c)

C. குறைந்த ஆயுற்காலம்

d)

D. மிகவும் உறுதியானது

9.

படம் ஒரு வகையான பல்லைக் குறிக்கின்றது. இப்பல்லின் பயன் என்ன?

a)

A. ஆப்பிளைக் கடித்துத் துண்டுகளாக்க

b)

B. இறைச்சியைக் கிழிக்க

c)

C. தாணியங்களை அரைத்து உண்பதற்கு

d)

D. சிவப்பு முள்ளங்கியைக் கடித்து அரைப்பதற்கு

10.

ஒரு மனிதனின் நிரந்தர பற்களின் எண்ணிக்கை 32 ஆகும். அவற்றில் கடைவாய் பற்கள் எத்தனை?

a)

A. 18

b)

B. 20

c)

C. 22

d)

D. 24

11.

பால்பற்களுக்கும் நிரந்தர பற்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு யாது?

a)

A. நிரந்தர பற்கள் பால் பற்களை விட சிறியதாக இருக்கும்

b)

B. நிரந்தர பற்கள் பால் பற்களை விட குறைவாக இருக்கும்

c)

C. நிரந்தர பற்கள் பால் பற்களை விட உறுதியாக இருக்கும்

d)

D. பால் பற்களுக்குப் பிறகு நிரந்தர பற்கள் விழும்

12.

படம் ஒரு பல்லின் அமைப்பைக் காட்டுகின்றது. அதில் X-பகுதியின் பெயர் என்ன?

a)

A. பற்சிற்பி

b)

B. தந்தினி

c)

C. ஈறு

d)

D. இரத்த நாளங்கள்

13.

பற்கள் உறுதியாக வளர துணைப்புரியும் சுண்ணாம்பு சத்து எந்த உணவில் அதிகம் உள்ளது?

a)

A. மிட்டாய்

b)

B. வாழைப் பழம்

c)

C. பால்

d)

D. கோழி இறைச்சி

14.

படம் உணவுச் செரிமான பாதையைக் காட்டுகின்றது. இதில் X என குறியிடப்பட்டுள்ள பகுதியின் பயன் யாது?

a)

A. உணவுகள் மென்று அரைக்கப்படுகின்றன

b)

B. உணவு செரிமானமாக்கப்படுகின்றது

c)

C. உணவுகளை இரைப்பைக்குக் கொண்டு செல்வது

d)

D. செரிமானமாக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்படுகின்றன.

15.

படம் மனிதனின் உணவு செரிமானமாகும் செயற்பாங்கினைக் குறிக்கின்றது. இதில் X-பகுதியின் பெயர் என்ன?

a)

A. உணவுக்குழாய்

b)

B. இரைப்பை

c)

C. குடல்

d)

D. மலவாய்

16.

எந்த விலங்கு மேற்காணும் விலங்கைப் போன்ற தன்மையுடையது?

i சிங்கம்

ii குரங்கு

iii நரி

iv யானை

a)

A. i,ii

b)

B. i,iii

c)

C. ii,iii

d)

D. ii, iv

17.

படம் ஒரு விலங்கின் பல் அமைப்பைக் காட்டுகின்றது. இந்த பல் அமைப்பைக் கொண்ட விலங்கு __________ ஆகும்.

a)

A. குதிரை

b)

B. சிறுத்தை

c)

C. பூனை

d)

D. குரங்கு

18.

ஓர் ஆண்டில் எத்தனை முறை பற்களைப் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்?

a)

A. ஒரு முறை

b)

B. இரண்டு முறை

c)

C. மூன்று முறை

d)

D. நான்கு முறை

19.

ஓர் உணவின் சுவையைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஐம்புலன் எது?

a)

A. காது

b)

B. மூக்கு

c)

C. நாக்கு

d)

D. தோல்

20.

இலையில் துவாரம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

a)

A. கம்பளிப் புழு இலைமேல் வசிப்பதால்

b)

B. கம்பளிப் புழுவின் உடல் இலையின் மேற்பரப்பில் உராய்வதால்

c)

C. கம்பளிப் புழு இலையை உண்பதால்

d)

D. கம்பளிப் புழுவின் எடை அதிகரிப்பதால்