Worksheetsதமிழ் படிவம் 1-3
Total questions: 25
Worksheet time: 15mins
கீழ்க்காண்பனவற்றுள் எது இரட்டைக்கிளவி அல்ல?
வழ வழ
சல சல
சில சில
மள மள
திருக்குறளில் விடுப்பட்ட சொல் யாது?
தன்னைத்தான் காக்கின் --------- காவாக்கால்
தன்னையே கொல்லும் ------
கொடுங்கேட்க , அழிவு
பெருங்குணம், குணம்
சினம்காக்க ,சினம்
மனம்காக்க , மனம்
சரியான மரபுத் தொடர் என்ன?
சொத்துக்கள்/ உடமை
(a)
பழமொழியை நிறைவு செய்க.
இளமையில் சோம்பல் முதுமையில் .........
மிடிமை
வறுமை
தேக்கம்
கவலை
சரியான உவமைத்தொடர் யாது?
மேலோட்டமாக...
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல
அழகுக்கு அழகு செய்வது போல
உள்ளம்கை நெல்லிக்கனி போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் ----------------
இழுக்கா இயன்றது அறம்
அதனை அவன்கண் விடல்
மிகைநாடி மிக்கக் கொளல்
வகைநாடி வழிதந்து நிற்க
வினா எழுத்துக்கள் யாவை?
ஆ ஓ எ ஏ யா
ஆ ஈ ஊ ஏ ஐ
எ ஏ யா யோ ஒ
ஏ ஆ யா எ ஒ
இச்சொல் எவ்வகை வினா ஆகும்?
அவனா?
அகவினா
புறவினா
ஒரு பொருளின் பெயர் எவ்வித காரணமுமின்றி வழங்கப்பட்டிருதால் அதனை என்னவென்று அழைபோம்?
பெயர்ச்சொல்
காரணப்பெயர்
இயற்சொல்
இடுகுறிப்பெயர்
கீழ்க்காணும் செய்யுள் எந்த நூலில் இடம்பெறும்?
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுலன் மாமணிச் சோதியன்
அறநெறிச்சாரம்
தேவாரம்
நாலடியார்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
கீழ்க்காணும் செய்யுளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையாய் ____நந்தும்____
வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு
சிறக்கும்
தேயும்
வளரும்
நலியும்
கீழ்க்காணும் 3 சொற்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
அவ்வளவு + பெரிய
அவனா + சொன்னான் ?
என்று + கேட்டான்
மூன்றிலும் வலிமிகும்
மூன்றிலும் வலிமிகாது
செடி கொடி
இந்தத் தொடரில் ஏன் வலிமிகவில்லை?
உம்மைத்தொடரில் வலிமிகாது
இடைச்சொல் தொடரில் வலிமிகாது
வேற்றுமைத்தொகையில் வலிமிகாது
உம்மைத்தொகையில் வலிமிகாது
கீழ்க்காண்பனவற்றுள் எது குன்றியவினை வாக்கியம் ஆகும்?
குதிரை கனைத்தது
சமையல் செய்தார்கள்
ஓவியம் வரைந்தாள்
சுவரில் தண்ணீர் தெளித்தனர்
கீழ்க்காணும் மரபுத்தொடர்களில் எது பொருந்திவரும் என்பதனைக் குறிப்பிடுக.
தன்னிடம் இருந்து தப்பிச் செல்ல முடியாதவாறு காவல் அதிகாரி திருடனை ___________________________ பிடித்துக் கொண்டார்.
உடும்புப் பிடி
ஈயாடவில்லை
உச்சிக்குளிர்தல்
பாட்டு வாங்குதல்
சூழல் உணர்த்தும் பழமொழி யாது?
ரூபாவிற்குச் சமையல் செய்ய தெரியாவிட்டாலும் தனக்குத் தெரிந்த சமையல் குறிப்புகளை வலையொளியில் பதிவேற்றம் செய்தாள். இதனைப் பார்த்து சமைத்த பலர் அவளுடைய அகப்பக்கங்களில் மோசமான கருத்துரைகளை வழங்கினர். இதனால் ரூபா மனமுடைந்து போனாள். இனி அதைப் பற்றி நன்கு தெரிந்த பின்னரே பதிவேற்றம் செய்ய முடிவெடுத்தாள்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
சொற்ப அறிவு ஆபத்துக்கிடம்
தன் கையே தனக்குதவி
அடாது செய்பவன் படாது படுவான்
கீழ்க்காணும் உரையாடலில் சீலாவின் கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
மதி : என்ன சீலா வாழ்க்கை இது? தேர்வில் சிறப்பாகப் புள்ளிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.. கிடைக்கவில்லை
சீலா : எப்படி கிடைக்கும்? படிக்காமல் முயற்சி செய்யாமல் இருக்கிறாய்... புள்ளிகள் மட்டும் எப்படி நிறைய கிடைக்கும்? கிடைத்தால் அதிசயம்தான் ...
இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
தன் கையே தனக்குதவி
உவமைத்தொடருக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.
பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல
தனுஷ்ராஜ் வெளிநாட்டிலிருந்து வந்த தன் உறவினர்களைக் கண்டதும் மகிழ்ந்தான்
குணசீலனுக்கு தேர்வில் சிறந்த புள்ளிகள் கிடைத்தது மட்டுமின்றி பள்ளியில் சிறந்த மாணவன் என்னும் பட்டத்திற்கும் தேர்ந்து எடுக்கப்பட்டான்.
சங்கீர்தனா தன் தோழி தனஸ்ரீயுடன் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு அனைவரும் பொறாமை கொண்டனர்
முத்தேஸ்வர்மாவும் அர்விந்தனும் சந்திக்க வேண்டும் என்று நினைத்த ரவீனா அக்கா, அவர்களைத் தேடி வ்ந்ததும் ஆச்சரியமடைந்தார்கள்.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
_______________________
நிறைவவு செய்க.
உடையது உடையரோ மற்று
ஊக்க முடையா னுழை
தன்னையே கொல்லும் சினம்
சொல்லிய வண்ணம் செயல்
திருவருட்பா செய்யுளின் அடியின் பொருளைத் தெரிவு செய்க.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்-
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
மனதில் ஒன்றும் நேரில் ஒன்றும் பேசுகின்ற வஞ்சகர்கள்
நெறிப்பட்ட மனதுடன் பிறரிடம் பேசும் ஒருவர்
பெருமயோடு பிறருடன் பேசுகின்ற இழிகுணம் உடையவர்
பிறர் மனம் வாட பொய் பேசுபவர்
அகர ஈற்று வினையெச்ச சொல்லைத் தெரிவு செய்க
போய்ப் பார்த்தான்
எடுத்துக் கூறினான்
பாடிய பாடல்
வரச் சொன்னான்
லிந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லில் பிழை உள்ளது?
நேற்றிரவு
மரஞ்சாய்ந்தது
அருசுவை
பரிமாறப்பட்டது
இவற்றில் எது உடன்பாட்டுவினை வாக்கியம் அல்ல ?
பிரவின் நோட்டுப் புத்தகம் எடுத்து வந்தான்
மதன் தேர்வுக்காக விழுந்து விழுந்து படித்தான்
ஹம்சவர்த்தினி காமெடி படம் பார்த்தும் சிரிக்கவில்லை
சர்வேந்திரா ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்றான்.
போலி மூன்று வகைப்படும் . கீழ்க்காணும் சொல் எவ்வகை போலியாகும்?
குயவன் - குசவன்
முதல் போலி
இடைப்போலி
கடைப்போலி
இந்தச் சொல்லில் மொத்தம் எத்தனை ஒலிகள் உள்ளன?
கடிகாரம்
6
7
8
9
10
