wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நொந்தே போயினும் வெந்தே மாயினும்

நந்தேசத்தர் உவந்தே சொல்வது ________ .

a)

நந்தலாலா

b)

வந்தே மாதரம்

c)

ஜெய ஜெய பாரதம்

d)

செந்தமிழ் நாடு

2.

எந்த ஊர்ப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியில் கேட்பதற்குக் கருவி செய்வோம்

என பாரதியார் பாடியுள்ளார் ?

a)

ராஞ்சி

b)

உஜ்ஜயினி

c)

காஷ்மீர்

d)

காசி

3.

வஞ்சனைப் பேய்களென்பார் - இந்த

மரத்திலென்பார்; அந்தக் குளத்திலென்பார்.

இவ்வரிகளைக் கொண்டுள்ள பாடலின் தொடக்க வரி என்ன?

a)

நெஞ்சு பொறுக்குதில்லையே

b)

அச்சமில்லை அச்சமில்லை

c)

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

d)

நெஞ்சிலுரமுமின்றி

4.

தனியொருவனுக்குணவிலை யெனில்


ஜகத்தினையழித்திடுவோம்


என்ற வரி வரும் பாடலின் முதல் வரி என்ன ?

a)

செந்தமிழ் நாடெனும் போதினிலே

b)

பாரத சமுதாயம் வாழ்கவே

c)

பாருக்குள்ளே நல்ல நாடு

d)

மன்னும் இமயமலை எங்கள் மலையே

5.

'வாழ்க நீ எம்மான்' என்று பாரதியார் யாரை வாழ்த்தினார் ?


a)

பால கங்காதர திலகர்

b)

வ. உ. சிதம்பரனார்

c)

மஹாத்மா காந்தி

d)

கோபால கிருஷ்ண கோகலே

6.

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித்திட வேண்டும்


இந்த வரிகள் அமைந்துள்ள பாடல் எது?

a)

காணி நிலம்

b)

ஓம் சக்தி

c)

யோக சித்தி

d)

காளிப் பாட்டு

7.

எதில் "குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?" என்று பாரதியார் வினவுகிறார்?

a)

தேசப்பற்றில்

b)

வீரத்தில்

c)

காதலில்

d)

சக்தியில்

8.

'உன் கண்ணில் நீர் வழிந்தால் - என்நெஞ்சில்

உதிரம் கொட்டுதடீ' என்று பாரதியார் யாரைப் பற்றிப் பாடுகிறார்?

a)

பாரதத் தாய்

b)

பராசக்தி

c)

கண்ணம்மா

d)

சுதந்திர தேவி

9.

"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் ;

தருமம் மறுபடி வெல்லும் "


இவ்வரிகள் எப்பாடலில் இடம்பெறுகின்றன?

a)

பாஞ்சாலி சபதம்

b)

குயில் பாட்டு

c)

பெண் விடுதலை

d)

முரசு

10.

"தையலை உயர்வு செய்"

என்ற வரி இடம்பெற்ற பாட்டு எது ?

a)

பெண் விடுதலை

b)

தாய் மாண்பு

c)

நெஞ்சோடு சொல்வது

d)

புதிய ஆத்திசூடி

11.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்

காட்சி கெடுத்திடலாமோ ?


இரு கண்கள் என்று குறிப்பிடப் படுபவை

a)

நாடும் வீடும்

b)

அன்பும் அறிவும்

c)

ஆணும் பெண்ணும்

d)

எண்ணும் எழுத்தும்

12.

பாப்பா பாட்டில் குறிப்பிடப் படாத

பறவை எது?

a)

கோழி

b)

குருவி

c)

காக்கை

d)

மயில்

13.

யாரை பாரதியார் ' சிறு புல்லென மதிக்கிறேன்' என்று குறிப்பிடுகிறார் ?

a)

வெள்ளையரை

b)

காலனை

c)

நெஞ்சில் உரமில்லாதவரை

d)

பாதகம் செய்பவரை

14.

எதனை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று பாரதி கூறுகிறார்?

a)

கற்பு

b)

நீதி

c)

வெற்றி

d)

புதுமை

15.

பிரிட்டிஷ் அரசின் கைது நடவடிக்கையினை முன்கூட்டியே அறிந்து

பாரதியார் எந்த ஊருக்குச் சென்றார் ?

a)

எட்டயபுரம்

b)

திருநெல்வேலி

c)

பாண்டிச்சேரி

d)

கடையம்

16.

பாரதியார் பணிபுரிந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ள இடம் எது?

a)

திருநெல்வேலி

b)

மதுரை

c)

பாண்டிச்சேரி

d)

எட்டையபுரம்

17.

பெண் விடுதலையைப் பற்றி பாரதியாரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் யார்?

a)

சுவாமி விவேகானந்தர்

b)

பால கங்காதர திலகர்

c)

சகோதரி நிவேதிதா தேவி

d)

அன்னி பெசன்ட்

18.

பாரதி இல்லம் சென்னையில் எங்கு உள்ளது?

a)

திருவல்லிக்கேணி

b)

மயிலாப்பூர்

c)

தியாகராஜ நகர்

d)

அடையாறு

19.

பின்வருவனவற்றுள் பாரதி பணிசெய்யாத பத்திரிகை எது?

a)

இந்தியா

b)

விஜயா

c)

சுதேசமித்திரன்

d)

தி ஹிந்து

20.

பாரதி தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டது எந்த நகரத்தில்?

a)

மெட்ராஸ்

b)

பாண்டிச்சேரி

c)

எட்டயபுரம்

d)

வாரணாசி