WorksheetsModule 7 - பெண்களிடம் ரத்தசோகை தவிர்த்தல்
Total questions: 20
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
இரத்தத்தில் இருக்கும் கீழ்க்கண்டவற்றுள் எதன் குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது?
a)
பிளாஸ்மா
b)
வெள்ளை இரத்த அணுக்கள்
c)
தட்டுக்கள்
d)
சிகப்பு இரத்த அணுக்கள்
2.
சிகப்பு இரத்த அணுக்களில் கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
a)
பாரா குளோபுலின்
b)
டெட்ரா குளோபின்
c)
ஹீமோகுளோபின்
d)
செப்டா குளோபின்
3.
ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
a)
வயிற்றுப்போக்கு
b)
காய்ச்சல்
c)
இரத்தசோகை
d)
மூச்சடைப்பு
4.
சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை எவை?
a)
இரும்புச்சத்து
b)
போலிக் அமிலம்
c)
வைட்டமின் B12
d)
இவை அனைத்தும்
5.
இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினின் முக்கிய செயல்பாடு எது?
a)
தொற்றுக்களை எதிர்த்தல்
b)
நுரையீரலிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லுதல்
c)
எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல்
d)
உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுதல்
6.
இரத்தப்போக்கு மற்றும் இரத்தசோகைக்கு காரணம் எது?
a)
குடல் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவது
b)
மாதவிடாய்
c)
மலேரியா
d)
இவை அனைத்தும்
7.
இரத்தசோகை இருப்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் எவை?
a)
உடல் சோர்வு மற்றும் பலவீனம்
b)
மனச்சோர்வு மற்றும் மன தளர்ச்சி
c)
எரிச்சலாய் உணர்தல்
d)
இவை அனைத்தும்
8.
இரத்தசோகை உள்ள நபரை கீழ்க்கண்டவற்றுள் எதை பார்த்து கண்டறியமுடியும்?
a)
வெளிறிய உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்
b)
வெளிறிய நகம் நாக்கு மற்றும் உதடு
c)
வேகமான நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு
d)
இவை அனைத்தும்
9.
பூச்சி மாத்திரையின் பயன் என்ன?
a)
குடல் புழுக்களை கொள்ள உதவுகிறது
b)
பசியை தூண்ட உதவுகிறது
c)
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
d)
இவை அனைத்தும்
10.
ஒரு மாதவிடாயின்போது பெண்களுக்கு எவ்வளவு இரத்தப்போக்கு இருக்கும்?
a)
20 மிலி – 30 மிலி
b)
30 மிலி – 40 மிலி
c)
40 மிலி – 50 மிலி
d)
50 மிலி – 60 மிலி
11.
இரும்புச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் பொழுது உடன் சேர்த்து எவ்வகை உணவு உட்கொள்ளுவதால், இரும்புச்சத்தை உடல் அதிகமாக உட்கவர்கிறது?
a)
வைட்டமின் A
b)
கொழுப்பு
c)
வைட்டமின் B
d)
வைட்டமின் C
12.
சராசரியான பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது எவ்வளவு கூடுதலான இரும்புச்சத்து தேவைப்படுகிறது?
a)
ஒரு நாளைக்கு 50 மிகி
b)
ஒரு நாளைக்கு 15 மிகி
c)
ஒரு நாளைக்கு 5 மிகி
d)
இவற்றுள் எதுவுமில்லை
13.
உடல் இரும்புச்சத்தை அதிகமாக உட்கவர்தலை அதிகரிப்பது எவ்வாறு?
a)
புளிப்புச்சுவை நிறைந்த எலுமிச்சம் பழம்
b)
கொய்யா, ஆரஞ்சு, நெல்லி மற்றும் உலர்ந்த பழ வகைகள்
c)
உணவு உண்பதற்கு முன் மற்றும் பின் டீ காபி அருந்துதலை தவிர்த்தல்
d)
இவை அனைத்தும்
14.
போஷன் அபியான் திட்டத்தின் மூலம், குழந்தைகள் மற்றும் பெண்களிடையே காணப்படும் இரத்தசோகையை வருடத்திற்கு எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்?
a)
0.02
b)
0.03
c)
0.04
d)
0.05
15.
இரத்த சோகையின் நீண்ட கால தாக்கம் எவை?
a)
ரத்த சோகை உள்ள தாய்மார்களின் குழந்தைகள் உடல் பலவீனமாகவும் மனத்தளர்ச்சி உடனும் காணப்படுவர்
b)
ரத்த சோகை உள்ள கருவுற்ற பெண் பிரசவத்தின்போது இறக்கும் வாய்ப்பும் அதிகம்
c)
இவை அனைத்தும்
d)
இவற்றுள் எதுவுமில்லை
16.
இரும்புச்சத்து மாத்திரை எவ்வளவு காலம் வரை செல்லுபடி ஆகும்?
a)
6 மாதம்
b)
3 மாதம்
c)
12 மாதம்
d)
24 மாதம்
17.
இரும்புச்சத்தை உறிஞ்சுவாதில் எலுமிச்சை உதவி புரியுமா?
a)
ஆம்
b)
இல்லை
18.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களில் எதில் ஏராளமான இரும்பு சத்து நிறைந்துள்ளது
a)
பச்சை இலை காய்கறிகள்
b)
கோதுமை
c)
பருப்புகள்
d)
அரிசி
19.
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் தேநீர் அல்லது காபி குடிக்காதீர்கள், அது இரும்பு சத்து உறிஞ்சுதலை குறைக்கிறது
a)
ஆம்
b)
இல்லை
20.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் இரண்டாவது மூம்மாதத்தில் எத்தனை நாட்களுக்கு தினமும் ஒரு இரும்பு சத்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்?
a)
50
b)
80
c)
100
d)
150
100 %
