wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

காவியா காய்கறிகளை நறுக்குகிறாள்.

b)

திருமதி பானுவும் திருமதி பார்வதியும் உரையாடினர்.

c)

கோமதி அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றாள்.

2.

கோவிட்-19 கிருமித் தொற்று கொடூரமாகி வருகின்றது. __________________ மலேசிய அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிறப்பித்துள்ளது.

a)

ஏனென்றால்

b)

ஆகவே

c)

இருப்பினும்

3.

கீதாவின் வீணை உடைந்து விட்டது. __________________ அவள் அதனைப் பழுது பார்க்க எடுத்துச் சென்றாள்.

a)

ஆனால்

b)

ஆகவே

c)

இருப்பினும்

4.

சரியான இலக்கண மரபைத் தெரிவு செய்க.

a)

ஒரு அரண்மனை

b)

ஓர் பையன்

c)

ஓர் இளவரசி

5.

சிவா தன் நண்பர்களுடன் திடல் சென்றான்.

a)

நான்காம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

6.

உயிர்க்குறில் எழுத்துகள் யாவை?

a)

அ , இ, உ , ஓ

b)

அ, உ, எ, ஐ, ஒ

c)

அ, இ, உ ,எ, ஒ

7.

சொல்லின் முதல் எழுத்தாகவே மட்டும் அமைபவை எவ்வகை எழுத்துகள்?

a)

மெய்யெழுத்துகள்

b)

உயிரெழுத்துகள்

c)

உயிர்மெய்யெழுத்துகள்

8.

ங், ஞ், ண்,ந், ம், ன் என்பவை எவ்வகை எழுத்துகளாகும் ?

a)

இடையின மெய்யெழுத்துகள்

b)

உயிரெழுத்துகள்

c)

வல்லின உயிர்மெய்யெழுத்துகள்

d)

மெல்லின மெய்யெழுத்துகள்

9.

நீ எனும் சொல் காட்டும் இடம் யாது?

a)

முன்னிலை

b)

தன்மை

c)

படர்க்கை

d)

எதிர்காலம்

10.

சரியான எதிர்கால சொல்லைத் தேர்ந்தெடுக.


நேற்று அப்பா காகிதக் கப்பல் ________________________.

a)

செய்தார்

b)

செய்வார்

c)

செய்கிறார்

11.

ஆற்றில் மீன்கள் துள்ளிக் _______________.

a)

குதித்தது

b)

குதித்தன

12.

வாக்கியத்தில் வரும் வினைமுற்று காட்டும் பாலைத் தெரிவு செய்க.


காட்டில் மரங்களை வெட்டுவதால் பறவைகள் இருப்பிடம் இன்றி அலைந்தன.

a)

ஒன்றன்பால்

b)

பலர்பால்

c)

பலவின்பால்

13.

ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தெரிவு செய்க.

a)

செம்படவன் - செம்படத்தி

b)

குயவன் -குயச்சி

c)

சீமான் - சீமத்தி

d)

பாடகன் - நடிகை

14.

படத்திற்கேற்ப சரியான தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க.

a)

கூட்டம்

b)

குலை

c)

மந்தை

d)

கொத்து

15.

படத்திகேற்ற சொல்லைத் தெரிவு செய்க.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

16.

சரியான நிறுத்தக்குறிகள் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அம்மா கடையில் பழங்கள், கீரைகள்,இறைச்சி, மீன் வாங்கினார்.

b)

அவரா உன் அண்ணன்!

c)

நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை.

d)

மாணவர்கள் குழுவில் தமிழ்மொழிப் பாடத்தை மீள்பார்வை செய்தனர்?

17.

எஃது இனவெழுத்து அல்ல?

a)

ஞ்ச

b)

ன்ற

c)

ம்ம

18.

சுட்டெழுத்தைத் தெரிவு செய்க.

a)

b)

c)

19.

குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர் யாது?

a)

பாய்மரப் படகு

b)

வேதம் ஓது

c)

தென்னந் தோப்பு

20.

கிரந்த எழுத்து சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

சாம்பார்

b)

ஔவை

c)

பூஜை

d)

ஐயம்