Worksheetsபழமொழி
Total questions: 8
Worksheet time: 4mins
1. கீழ்க்காண்பனவற்றுள் எது பழமொழி ?
அம்மா பிள்ளைக்குப் பால் கொடுத்தார்.
அழுத பிள்ளை தோசை சாப்பிடும்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
பால் குடிக்கததால் பிள்ளை அழுதது.
2.அழுத ..................... ...................... குடிக்கும்.
பால்
மீன்
பிள்ளை
சாப்பிடும்
பழமொழிக்கு ஏற்ற சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
தமக்கு வேண்டியதை அழுதுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் அழுந்து தனக்கு வேண்டியதைச் சாதிக்க வேண்டும்.
கொடுக்கப்பட்ட சூழல் பழமொழிக்குப் பொருந்தி இருக்கின்றதா?
குடும்பத்தில் பணப் பிரச்சனை ஏற்பட்டதால், ராமு அதிக நேரம் வேலை செய்யத் தொடங்கினான்.
சரி
பிழை
கொடுக்கப்பட்ட சூழல் பழமொழிக்குப் பொருந்தி இருக்கின்றதா?
அமுதா தினமும் பால் குடிப்பதால் அவள் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறாள்.
சரி
பிழை
கொடுக்கப்பட்ட சூழல் பழமொழிக்குப் பொருந்தி இருக்கின்றதா?
கவிதா பள்ளியில் தோழியின் பணப்பையைத் திருடியதால் ஆசிரியாரிடம் மாட்டிகொண்டாள்.
சரி
பிழை
கொடுக்கப்பட்ட சூழல் பழமொழிக்குப் பொருந்தி இருக்கின்றதா?
ஆதவனுக்குக் கணிதம் பாடத்தில் நிறைய சிக்கல்கள் இருந்ததால் ஆசிரியரைத் தனியாகச் சந்தித்து தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டான்.
சரி
பிழை
கொடுக்கப்பட்ட சூழல் பழமொழிக்குப் பொருந்தி இருக்கின்றதா?
மதன் தனக்குப் பிடித்தச் சட்டையை வாங்குவதற்காக அவனின் அப்பாவிடம் அழுந்து பிடிவாதம் செய்தான்.
சரி
பிழை