wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்-ல,ள,ழ கர எழுத்துச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சீனாவில் வீசிய சூறா________யால் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.

a)

வலி

b)

வளி

c)

வழி

2.

பல்கலைக்கழகத்திலிருந்து விடுமுறைக்கு வீடு திரும்பிய அக்கா __________ காணப்பட்டாள்.

a)

இலைத்து

b)

இளைத்து

c)

இழைத்து

3.

அழகன் தன் மகிழுந்தின் சாவியைக் காணாமல் வீட்டின் _____________ முடுக்கெல்லாம் தேடினான்.

a)

மூலை

b)

மூளை

c)

மூழை

4.

பல்____________ ஏற்பட்ட காரணத்தினால் கம்பன் தீபாவளியன்று பலகாரங்கள் சாப்பிட முடியாமல் வருத்தப்பட்டான்.

a)

வலி

b)

வளி

c)

வழி

5.

நாம் _______________ ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற பலன்கள் நமக்கு கண்டிப்பாக ஏற்படும் என அம்மா அடிக்கடி கூறுவார்.

a)

இலைக்கும்

b)

இளைக்கும்

c)

இழைக்கும்

6.

பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட இவ்வேளையில் தங்கத்தின் ___________ மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

a)

விலை

b)

விளை

c)

விழை

7.

பயிர்களின் ______________ அதிகரிக்க இயற்கை உரம் மட்டுமே உதவும் என்பதைப் பல விவசாயிகள் தற்போது உணர்ந்துள்ளனர்.

a)

விலைச்சலை

b)

விளைச்சலை

c)

விழைச்சலை

8.

கல்வி அறிவு மற்றும் உடல் _______________ இல்லையென்றால் வாழ்வில் நாம் எதுவும் சாதிக்க முடியாத நிலை ஏற்படும்.

a)

உலைப்பு

b)

உளைப்பு

c)

உழைப்பு

9.

வகுப்பில் தன்னைப் __________ சுமத்திய தன் நண்பனை எண்ணி வருந்தினான் அமுதன்.

a)

பலி

b)

பளி

c)

பழி

10.

இயற்கை __________ சூழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டிருந்ததால், மலேசியாவை சுவர்ண பூமி என அழைப்பர்.

a)

வலம்

b)

வளம்

c)

வழம்