NEW
Font size
Worksheetsதமிழ்மொழி பயிற்சி 1
Total questions: 20
Worksheet time: 10mins
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
12
16
20
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = அ
க் + ஆ = ஆ
அ + க் = க்
க் + அ = க
பின்வருவனவற்றுள் எஃது இனவெழுத்து அல்ல.
தங்கம்
உணவு
கன்று
அம்பு
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
சீப்பு, தார், குலை, குழு போன்றன என்ன வகைப்பெயர்?
பகுதிப் பெயர்
விகுதிப் பெயர்
தொகுதிப் பெயர்
தகுதிப் பெயர்
என்ன வகைப் பெயர்?
பொருட்பெயர்
சினைப் பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
செல்வன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான். இவ்வாக்கியத்தில் இடம்பெற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.
படித்தான், செய்தான்
பாடங்களை, தேர்வினை
முறையாகப், சிறப்பாகச்
பாடங்களைப் படித்தான்
நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
செய்தி வாக்கியம்
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க
கல்வியறிவு - கல்வி கேள்வி
உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்
சீரும் சிறப்பும் - அருமை பெருமை
கௌரி ___________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.
A. காலையும் மாலையும்
B. பழக்க வழக்கம்
C. அங்கும் இங்கும்
D. அன்றும் இன்றும்
______________ சிறந்து விளங்கிய யூ.பி.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களைக் கல்வியமைச்சுப் பாராட்டி விருதுகள் வழங்கியது.
A. ஆடல் பாடல்களில்
B. நன்மை தீமைகளில்
C. கல்வி கேள்விகளில்
D. ஆடை அணிகலன்களில்
1. ‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
ஒரே பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஓட்டை
வாய்
நாக்கு
நீளுதல்
தோள்
கொடுத்தல்
கை
கொடுத்தல்
முழு
மூச்சு
முட்டுக்கட்டை
மனப்பால்
குடித்தல்
குரங்குப்
பிடி
இச்சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர் யாது?
இராமு அல்லும் பகலுமாகத் தேர்வுக்குப் படித்துத் தயார் ஆனான்.
A. மனப்பால் குடித்தல்
B. கங்கணம் கட்டுதல்
C. முழு மூச்சு
D. வெளுத்து வாங்குதல்
சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்
C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.
D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
மேற்காணும் குறளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
சூதும் வாதும் வேதனை செய்யும்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
