wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pre-Link : Module 14 - நோயின் போது உணவளித்தல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தாய் குழந்தைக்கு எத்தனை மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்?

a)

3- மாதம் வரை

b)

2-வாரம் போதுமானது

c)

4 –மாதம் வரை

d)

6 – மாதம் வரை

2.

6 மாதம் குறைவாக உள்ள குழந்தைக்கு தண்ணீர் தாகமாக இருப்பதாக தாய் எண்ணினால் எவ்வளவு தண்ணீர் கொடுக்கலாம்?

a)

புட்டி பாட்டில் அளவு தண்ணீர் கொடுக்கலாம்

b)

தேவையான அளவு காயவைத்த தண்ணீர் கொடுக்கலாம்

c)

ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீர் கொடுப்பது போதுமானது.

d)

6 – மாதம் வரை தாய்பால் தவிர வேறு எதுவும் கொடுக்க கூடாது.

3.

உலக தாய் பால் வாரம் எப்பொழுது கொண்டாடபடுகிறது?

a)

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம்

b)

பிப்ரவரி 2 வது வாரம்

c)

ஜனவரி மாதம் முதல் வாரம்

d)

ஏப்ரல் மாதம் முதல் வாரம்

4.

குழந்தைக்கு கூடுதல் உணவு தொடங்க எந்த மாததில் தொடங்கலாம்?

a)

3 - மாதத்தில் இருந்து

b)

6 - மாதத்தில் இருந்து

c)

ஒரு வருடத்திற்கு பிறகு

d)

குழந்தை பிறந்த உடன்.

5.

6 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைக்கு சிறியதாக உடல்நலம் பாதிப்படையும் போது என்ன செய்ய வேண்டும்?

a)

தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

b)

மருந்து பொருட்கள் மட்டும் கொடுக்கவும்

c)

குழந்தை அடிக்கடி தாய்பால் குடிக்க விரும்பும் அதனால் அடிக்கடி தாய் பால் கொடுக்கவும்

d)

நீர் ஆகாரம் கொடுக்கலாம்

6.

நோய்வாய் பட்டிருக்கையில் குறைவான உணவை குழந்தை உண்பதற்கு காரணம்?

a)

பசியின்மை

b)

தூங்கி கொண்டே இருப்பதால்

c)

குழந்தை அழுந்து கொண்டே இருப்பதால்

d)

அனைத்தும் சரி

7.

6 மாதத்திற்க்கு மேற்பட்ட குழந்தை நோய்வாய்ப்படும் போதும், குழந்தை பசியின்மையில் இருக்கும் போதும் தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

நோய் உள்ள குழந்தைக்கு உணவு எதுவும் கொடுக்க கூடாது.

b)

தண்ணீர் மட்டும் கொடுப்பது சிறந்தது.

c)

குழந்தை பசியின்றி காணப்பட்டாலும் தாய் பசியை தூண்டும் உணவும், பிடித்தமான உணவும் சிறிது சிறிதாக உணவு கொடுக்கலாம்.

d)

மேற்கூறிய எதுவும் இல்லை.

8.

6 மாதத்திற்கு மேல் உள்ள நோய்வாய்பட்ட குழந்தை நோயில் இருந்து மீண்ட பின் அதிக உணவு உட்கொண்டால் என்ன செய்ய வேண்டும்

a)

அளவான உணவு மட்டும் கொடுக்கவும்

b)

நோயில் இருந்து மீண்ட குழந்தைக்கு அதிக அளவு உணவு தேவைப்படும்,எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்கவும்.

c)

சிறிது காலத்திற்கு திரவ உணவு மட்டுமே கொடுக்கவும்

d)

மேற்கூறிய அனைத்தும் தவறு.

9.

தாய் நோயுற்ற காலத்தில் பால் கொடுக்கலாமா?

a)

பால் கொடுப்பது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்

b)

தாய்பால் கொடுக்கலாம்

c)

புட்டி பால் கொடுக்கலாம்

d)

அனைத்தும் சரி

10.

HIV - தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்பால் கொடுக்கலாமா?

a)

தாய்பால் கொடுக்க கூடாது

b)

புட்டிபால் மட்டுமே கொடுக்கலாம்

c)

தாய் பால் கொடுக்கலாம்,தாய் ART – சிகிச்சை விடாமல் இருக்க வேண்டும்.

d)

தாய் பால் தானம் கேட்கலாம்.

11.

6 மாதம் குறைவான குழந்தைக்கு புட்டி பால் கொடுக்கும் பொழுது என்ன ஆகிறது?

a)

குழந்தையின் எடை அதிகரிக்கும்

b)

குழந்தை பசி ஆறும்.

c)

புட்டியில் உள்ள ரப்பர் பகுதியில் உள்ள கிருமியினால் குழந்தைக்கு வயிற்று போக்கு ஏற்படலாம்

d)

புட்டி பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

12.

நோயின் போது குழந்தை உண்ண மறுத்தால், தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

குழந்தைக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

b)

சிறிய அளவில் குழந்தைக்கு பிடித்த உணவை கொடுக்க வேண்டும்.

c)

அதிக அளவில் உணவு கொடுக்க வேண்டும்.

d)

திரவ உணவுகள் கொடுக்கலாம்.

13.

நோயிற்கு பிறகு குழந்தையின் பசிக்கு ஏற்ப ________________

a)

ஒரே தடவையில் வயிறு நிறையும் வரை உணவு புகட்டவும்.

b)

குறைவான அளவுகளில் அடிக்கடி உணவு கொடுக்கவும்.

c)

உணவு கொடுக்க கூடாது.

d)

தண்ணீர் கொடுக்கலாம்.

14.

2 ஆண்டுகள் ஆகும் வரை குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்பால் கொடுப்பது அவசியம், அதனால் தாய்பால் கொடுப்பது சுரக்கும்.

a)

சரி

b)

தவறு

15.

நோய்வாய்பட்டிருக்கும் போது அல்லது குணமானபின் ,எளிதாக சீரணமாககூடிய உணவு குழந்தையின் ஊட்டச்சத்து தேவைக்கு போதுமானது அல்ல.

a)

சரி

b)

தவறு

16.

சில சமயங்களில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், தாய்மார்கள் புட்டியில் பால் ஊட்ட கூடும், இது ஆபத்தானது

a)

சரி

b)

தவறு

17.

நோய் வாய் பட்டு இருக்கையில் குழந்தைக்கு அடிக்கடி தாய்பால் புகட்ட வேண்டும்.

a)

சரி

b)

தவறு

18.

ஆறு மாதகளுக்கு மேல் உள்ள குழந்தைக்கு நோய் குணமான பின் இணை உணவு கொடுப்பதை அதிகரிக்க வேண்டுமா குறைக்க வேண்டுமா?

a)

அதிகரிக்க வேண்டும்

b)

குறைக்க வேண்டும்

19.

நோயின் பொழுது துணை உணவு எடுத்து கொள்வதை காட்டிலும் தாய்பால் கொடுப்பது எளிதானதாகும்.

a)

சரி

b)

தவறு

20.

தாய் பால் சுரக்காத பொழுது புட்டிபால் கொடுப்பது சிறந்தது.

a)

சரி

b)

தவறு