wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 5

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளின் முதல் அடியைத் தேர்ந்தெடுக.


-----------------------------------------------------------

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

a)

எப்பொருள் யார்யார் கேட்பினும் அப்பொருள்

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

c)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

d)

எப்பொருள் கேட்பினும் அப்பொருள்

2.

பொருளுக்கேற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படும்.

a)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்றை யவை

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

d)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

3.

________________________________________________________

தீமை இலாத சொலல்

a)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

c)

தீயவை தீய பயத்தலால் தீயவை

d)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

4.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

a)

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலா, நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

b)

ஒருவருக்கு தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்.

5.

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக் கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்றை யவை

b)

ஒருமைக்கன் தான்கற்ற கல்வி ஒருவருக்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

c)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

6.

மோப்பக் குழையும் அனிச்சம்__________________________

நோக்கக் குழையும் விருந்து.

a)

முகந்திறந்து

b)

முகந்திரிந்து

c)

முகந்திறிந்து

d)

முகந்திரி