NEW
Font size
Worksheetsதமிழ் மொழி புதிர்க் கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் நேர்மையுடன் இருந்தால் எந்த காரியத்தையும் பயமின்றி துணிவுடன் செய்யலாம்.
மேற்காணும் கூற்றைக் குறிக்கும் புதிய ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
ஆறுவது சினம்
ஏறுபோல் நட
திருமணத்தின் போது மணமகள் அணிந்திருந்த தங்க நகைகள் ____________ என மின்னின.
பளீர் பளீர்
தக தக
சர சர
தட தட
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.
' ஒரு தந்தை தன் மூன்று மகன்களும் அடிக்கடி சண்டையிடுவதைக் கண்டு வருந்தினார். ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்தி உடைக்குமாறு பணித்தார். அவர்கள் அதனை எளிதாக உடைத்து விட்டனர். பின்னர், அக்குச்சிகளை ஒரே கட்டாக கட்டி உடைக்குமாறு பணித்தார். அவர்களால் அக்கட்டை உடைக்க முடியவில்லை'
இளங்கன்று பயமறியாது
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஒற்றுமையே பலம்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற குறளைத் தெரிவு செய்க.
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
கீழ்க்காணும் செய்யுளை எழுதியவர் யார்?
தங்குறைத்தீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்- திங்கள்
கறையிருளை நீக்க கருதா துலகில்
நிறையிருளை நீக்குமே னின்று
ஒளவையார்
சிவபிரகாச சுவாமி
குமரகுருபர சுவாமிகள்
அதிவீர ராம பண்டியர்
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல நாடுகளில் உள்ள நல்லுள்ளங்கள் ___________________________.
பெயர் பொறித்தனர்
ஈவிரக்கம்
கை கூடினர்
கை கொடுத்தனர்
செய்யுளுக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கொடுக்கக்கூடாது
பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
அல்லும் பகலும் - எந்த காலத்திலும்
அன்றும் இன்றும் - எல்லா நேரத்திலும்
மூலை முடுக்கு - எவ்விடத்திலும்
தான தர்மம் - கொடுத்தலும் வாங்குதலும்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்து கொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
நெல்லுக்குக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
__________________________________________________________
__________________________________________________________
இவ்வுலகில் வாழும் நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும் மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கிறது.
செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம் கொண்ட ஒருவர் வேறு எதையும் கருதார்.
நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு காட்டாமல் அனைவருக்கும் நடுநிலையில் நின்று அருள் புரிபவன் இறைவன்.
மேலான குணமுடையவர் தம் நலம் கருதாமல் பிறர் நலத்துக்கே பாடுபடுவர்.
