Worksheetsசெய்யுளும் மொழியணியும் (மதிப்பீடு)
Total questions: 10
Worksheet time: 5mins
குமரவேல் காணாமல் போன தன் கடிகாரத்தைச் _____________ தேடினான்.
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
அன்றும் இன்றும்
யூ.பி.எஸ். ஆர். தேர்வில் 8 ஏக்கள் பெறுவேன் என குமரன் _______________________.
கரி பூசினான்
மனக்கோட்டை கட்டினான்
கங்கணம் கட்டினான்
கீழ்க்காணும் உலகநீதியை நிறைவு செய்க.
_______________________________ திரிய வேண்டாம்.
ஓதாம லொருநாளும்
போகவிட்டுப் புறஞ்சொல்லித்
நெஞ்சாரப் பொய்தன்னைச்
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.
மேற்காணும் பொருளுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
பொருளுக்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.
*சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
திருக்குறளை நிறைவு செய்.
_____________ ____________ _________________ துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
துணிக எண்ணித் தினமும்
எண்ணித் துணிக கருமம்
எண்ணித் துணிக வீரம்
தன்னை அவமானப்படுத்திய தன் நண்பர்களின் முன், ஊர் போற்றும் சிறந்த மருத்துவராக நின்று, அவர்களின் முகத்தில் அமுதன் கரி பூசினான்.
அவமானம் ஏற்படுத்துதல்
மதிப்பைக் கொடுத்தல்
உறுதி பூணுதல்
கொடுக்கப்பட்டுள்ள வெற்றி வேற்கையில் கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு பொருத்தமான வேறு சொல் எது?
கல்விக்கு அழகு கசடற மொழிதல்.
சரியாக
பிழையாக
பிழையின்றி
சில நேரங்களில், உண்மையை விட வதந்திகள் ________ பரவுவதை நாம் உணர முடியும்.
மலரும் மணமும் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
காட்டுத்தீ போல
சூழலுக்கு ஏற்ற திருக்குறள் யாது?
முகிலன் : அமுதா, நீ ஓய்வு கிடைக்கும்
போதெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறாயே! ஏன் அமுதா?
அமுதா : முகிலன், நாம் நிறைய வாசிக்கும் போதுதான் நமக்கு அதிக விஷயங்கள் கிடைக்கும். அதோடு பொது அறிவும் பெருகும்.
முகிலன் : அப்படியா ! நானும் வாசிக்கப் போகிறேன்.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
