NEW
Font size
Worksheetsதமிழ்மொழி மீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
1. யாழினி பேருந்து நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிய மலர்விழியை ____________________ தேடினாள்.
அல்லும் பகலும்
அங்கும் இங்கும்
அன்றும் இன்றும்
2.உலக நீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது
அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
3. கீழ்க்கண்ட வாக்கியங்களில் கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க
அப்பா புற்களைக் கத்தியால் வெட்டினார்.
அங்கே செல்லாதே.
ஐயோ! வலிக்கிறதே!
4. கீழ்க்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற இடைச்சொற்களைத் தேர்ந்தெடுக.
கண்மணி மிகவும் குறும்புக்காரி. ____________________________________ அவள் எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்றாள்.
இருப்பினும்
எனவே
ஆகவே
5. சரியான மரபு வழக்குச் சொற்களைத் தெரிவு செய்க.
குயவர்கள் மட்பாண்டங்களை _________________________ சந்தையில் விற்றனர்.
முடைந்து
வனைந்து
எய்து
6. கோடிட்ட சொல்லின் பால் வகையைத் தெரிவு செய்க.
சுனாமியில் சிக்கிக் கொண்ட குழந்தையை ஒரு நாய் காப்பாற்றியது.
பலவின்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
7.வாக்கியத்தில் காணும் சரியான வேற்றுமையைத் தெரிவு செய்க
முகிலனுக்குப் பரிசளிக்கப்பட்ட அனைத்துக் கவிதை புத்தகங்களும் பாரதிதாசனால் புனையப்பட்டதாகும்.
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
8. கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற சரியான செய்யுள் அடியைத் தெரிவு செய்க
தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போல
மாசில் வீணையும் மாலை மதியும்
வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
9. வாக்கியத்தில் சரியான வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.
____________ நேற்று _____________நிறைய __________ பிடித்தார்.
மீனவர் , ஆறு , மீன்களைப்
மீனவர் . ஆற்றில் , மீன்களைப்
மீனவர், ஆற்றில் , மீனுக்குப்
10. கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
ஊருடன் கூடி வாழ்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
