Worksheetsஆறாம் வகுப்பு - இலக்கணப்பகுதி - திருப்புதல்
Total questions: 20
Worksheet time: 10mins
இன எழுத்துச் சொல்லுக்கு உதாரணம் தருக.
பள்ளி
தங்கம்
பச்சை
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
இராமு பல்லியைப் பார்த்துக்கொண்டே பள்ளிக்குச் சென்றான்.
இராமு பள்ளியைப் பார்த்துக்கொண்டே பல்லிக்குச் சென்றான்.
இராமு பல்லியைப் பார்த்துக்கொன்டே பள்ளிக்குச் செண்றாண்.
மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கு எடுத்துக்காட்டு.
ஆ
க
ஃ
சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களை மொழி _________________ என்று
கூறுவர்.
முதல் எழுத்துகள்
இடை எழுத்துகள்
இறுதி எழுத்துகள்
தவறான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
நன்றி
வென்றான்
தென்ரல்
ஐ’ மற்றும் ‘ஔ’ என்ற எழுத்துகளின் இன எழுத்துகள் _____________.
இ மற்றும் உ
ஈ மற்றும் ஊ
அ மற்றும் ஆ
‘சிரம்’ என்பதன் பொருள் _______________.
தளை
தலை
தழை
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
தேர் திறுவிழாவிற்குச் சென்ரனர்.
தேர் திருவிளாவிற்குச் செண்றனர்.
தேர் திருவிழாவிற்குச் சென்றனர்.
ஒன்றைச் சுட்டிக் காட்டப் பயன்படும் எழுத்துகளுக்கு _____________ என்று
பெயர்.
வினா எழுத்துகள்
சுட்டு எழுத்துகள்
துணை எழுத்துகள்
சுட்டெழுத்துகள் _______, _______, _______ ஆகும்.
அ, இ, உ
ஆ, ஈ, ஊ
அ, ஈ, உ
மொழியின் இறுதியில் வராத மெய்யெழுத்துக்கு எடுத்துக்காட்டு தருக.
ன்
ம்
க்
சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துக்கு உதாரணம் தருக.
உயிர் எழுத்து
மெய் எழுத்து
ஆய்த எழுத்து
சரியான இனஎழுத்துகளைத் தேர்ந்தெடுக்க.
ப்ம்
க்ங்
ண்ட்
இன எழுத்துச் சொல்லுக்கு உதாரணம் தருக.
செல்வன்
கங்கை
பாப்பா
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
கதிரவன் காளையில் உதித்து மாலையில் மரையும்
கதிறவன் காலையில் உதித்து மாளையில் மறையும்
சரியான வினாச்சொல்லைக் கொண்டு நிரப்புக.
என் மிதிவண்டி _____________ உள்ளது?
ஏன்
எங்கே
அங்கே
மொழியின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து ______ ஆகும்.
ஓ
யா
ஏ
தமிழ் எழுத்துகளில் ________________ எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.
வல்லினம்
மெல்லினம்
ஆய்த
கிணற்றில் நீர் ________________.
இறை
இரை
இழை
யானை ________________ வாய்ந்த மிருகம்.
பளம்
பலம்
பழம்
