NEW
Font size
WorksheetsNithy சித்திரைப்பிறப்பு / நவராத்திரி விழா
Total questions: 20
Worksheet time: 10mins
நவராத்திரி எப்பொழுது கொண்டாடப்படும்?
தை
சித்திரை
ஐப்பசி
புரட்டாதி
நவம் என்பதன் பொருள் யாது?
மூன்று
ஐந்து
ஒன்பது
பத்து
பழந்தமிழ் மக்கள் வாழ்க்கைக்கு எவை தேவை எனக் கருதினர்?
உணவு, மருந்து, வீடு
கல்வி, செல்வம், வீரம்
உடை, வீடு, விழாக்கள்
கலை, வரலாறு, இலக்கணம்
கல்விக்குரிய கடவுளாக யாரை வணங்கினர்?
கலைமகள்
சிவன்
திருமகள்
மலைமகள்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் யாருக்கு விழா எடுத்தனர்?
கலைமகளுக்கு
திருமகளுக்கு
மலைமகளுக்கு
திருமாலுக்கு
ஒன்பதாம் நாள் யாருக்கு சிறப்பு விழா எடுத்தனர்?
கலைமகளுக்கு
திருமகளுக்கு
மலைமகளுக்கு
பிள்ளையாருக்கு
எத்தனையாவது நாள் மாநோன்பு நாள் என்று அழைக்கப்படுகின்றது?
மூன்றாவது நாள்
ஆறாவது நாள்
ஒன்பதாவது நாள்
பத்தாவது நாள்
மாநோன்பு நாளை வேறு எவ்வாறு அழைப்பர்?
ஆயுதபூசை நாள்
திருமணநாள்
குடமுழுக்குநாள்
முதற்பூசை நாள்
நவராத்திரியில் செல்வம் வேண்டி யாரை வழிபடுவர்?
கலைமகளை
திருமகளை
மலைமகளை
முருகனை
வீரம் வேண்டி யாரை வழிபடுவர்
கலைமகள்
திருமகள்
அலைமகள்
மலைமகள்
சித்திரைப்பிறப்பு எந்தக் காலத்தில் இடம் பெறும் விழா?
முதுவேனில்
இளவேனில்
கோடை காலம்
சித்திரைப் பிறப்பு அன்று எதை வைத்து நீராடுவர்?
சீயாக்காய்
தேசிக்காய்
மருத்து நீர்
சித்திரைப் பிறப்பு அன்று எத்தனை சுவையுள்ள கறிகள் சமைப்பர்?
ஐந்து
நான்கு
ஆறு
நீராடுவர் என்பதன் ஒத்தசொல்
குளிப்பர்
சமைப்பர்
கழுவுவர்
வைகறை என்பதன் ஒத்தசொல்
அதிகாலை
மாலை
மதியம்
தூற்றுதல் என்பதன் எதிர்ச்சொல்
வைதல்
போற்றுதல்
கூடுதல்
வாழ்த்துதல் என்பதன் எதிர்ச் சொல்
வைதல்
போற்றுதல்
குறை சொல்லல்
உலகமக்கள் என்பதை பிரித்து எழுதினால்
உலகு+மக்கள்
உலா+மக்கள்
உலகம்+மக்கள்
உழவன் என்பது
ஆண் பால் , ஒருமை
ஒன்றன் பால் , ஒருமை
ஆண் பால் , பன்மை
கொண்டாடுவர் என்பது
பலவின்பால், பன்மை
பலர்பால், பன்மை
பலர்பால், ஒருமை
