NEW
Font size
Worksheetsஅகச்சுட்டு புறச்சுட்டு
Total questions: 10
Worksheet time: 5mins
திரு குமார் சிலம்பக் கலையில் சிறந்து விளங்கினார். .............இன்று ஒரு சிலம்பப் பயிற்றுனராகத் திகழ்கிறார்.
அவர்
இவர்
ராஜா திடலில் விளையாடினான். அப்பொழுது ................ கால் இடறிக் கீழே விழுந்தான்.
இவன்
அவன்
இங்கு நிறைய மாணவர்கள் விளையாடுகின்றனர். .............. இங்குக் கல்வி பயில்கின்றனர்.
அம்மாணவர்கள்
இம்மாணவர்கள்
தோட்டத்தில் மல்லிகை மலர்கள் மலர்ந்து மணந்தன. ...............மாலதி பறிக்கச் சென்றாள்.
இம்மலர்களை
அம்மலர்களை
பள்ளி மணி ஒலித்ததும் மாணவர்கள் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றனர். ...............அவர்கள் உணவு வாங்கி உண்டனர்.
அங்கு
இங்கு
தேசிய விலங்கியல் சாலையில் என் நண்பன் ரமேஷைச் சந்தித்தேன். 'அதோ ............. இருந்து வரும் யானையைப் பார்' என்று காட்டினான்.
இப்பக்கத்தில்
உப்பக்கத்தில்
இந்த வகுப்பறை மிகவும் சுத்தமாக உள்ளது. ............... ஆசிரியர் திருமதி செல்வி ஆவார்.
இவ்வகுப்பறையின்
அவ்வகுப்பறையின்
ஆசிரியரின் மேசை மீது பயிற்சிப் புத்தகங்கள் இருந்தன. ............... எடுத்துவர என்னைப் பணித்தார்.
இப்புத்தக்கங்களை
அப்புத்தகங்களை
இதோ என் அருகில் நிற்பவள் என் தோழி ............... மிகவும் பண்பானவள்.
அவள்
இவள்
'............... இனி நட்பு கொள்ளாதே' என்று அவ்வழியே சென்று கொண்டிருந்த வாசுவைச் சுட்டிக்காட்டினார் அம்மா.
அப்பையனிடம்
இப்பையனிடம்
