NEW
Font size
Worksheets10.எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள்
Total questions: 15
Worksheet time: 8mins
ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண்
0.7 V
0.3 V
2.0 V
2.2 V
ஒரு குறைக் கடத்தியில் மாசூட்டலின் விளைவாக
இயங்கும் மின்னூட்ட ஊர்திகள் குறையும்
வேதிப்பண்புகளில் மாற்றம் ஏற்படும்
படிக அமைப்பில் மாற்றம் ஏற்படும்
சகப்பிணைப்பு முறியும்
சார்பளிக்கப்படாத p-n சந்தியில், p பகுதியில் உள்ள பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகள் (அதாவது துளைகள்) n பகுதிக்கு விரவல் அடைவதற்கு காரணம்
p-n சந்தியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு
n பகுதியில் உள்ளதைவிட , p பகுதியில் உள்ள அதிக துளை செறிவு
n பகுதியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் கவர்ச்சி
p பகுதியில் உள்ளதை விட, n பகுதியில் உள்ள எலக்ட்ரான்களின் அதிக செறிவு
ஓர் நேர் அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும்
00 - 900
900 - 1800
00 - 1800
00 - 3600
செனார் டையோடின் முதன்மைப் பயன்பாடு எது?
அலை திருத்தி
பெருக்கி
அலை இயற்றி
மின்னழுத்தச் சீரமைப்பான்
சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது
விரவல்
மறு இணைப்பு
ஒளி வோல்டா செயல்பாடு
ஊர்தியின் பாய்வு
ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழப்படக் காரணம்
மின்னூட்ட ஊர்திகளின் மறு இணைப்பு
லென்சுகளின் செயல்பாட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு
சந்தியின் மீது படும் ஒளியின் பெருக்கம்
மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்
p-n சந்தியில் உள்ள மின்னழுத்த அரண்
1) குறைக்கடத்திப் பொருளின் வகை 2) மாசூட்டலின் அளவு 3)வெப்பநிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும் . பின்வருவனவற்றுள் எது சரியானது?
1 மற்றும் 2
2 மட்டும்
2 மற்றும் 3
1, 2 மற்றும் 3
ஒரு அலை இயற்றியில் தொடர்ச்சியான அலைவுகள் ஏற்பட
நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்
பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும்
கட்டமாற்றம் சுழி அல்லது 2π ஆக இருக்க வேண்டும்
மேற்கூறிய அனைத்தும்
ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில் , அதன் வெளியீடானது
0100
1000
1100
0011
பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்
a
b
c
d
பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது
AND கேட்
OR கேட்
NOR கேட்
NOT கேட்
பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக இருக்கும்போது , உள்ளீடு ABC ஆனது
101
100
110
010
பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண் மாற்றப்படுவது ................ எனப்படும்
வீச்சுப் பண்பேற்றம்
அதிர்வெண் பண்பேற்றம்
கட்டப் பண்பேற்றம்
துடிப்பு அகல பண்பேற்றம்
3 MHz முதல் 30 MHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்படுவது
தரை அலைப் பரவல்
வெளி அலைப் பரவல்
வான் அலைப் பரவல்
செயற்கைக் கோள் தகவர்தொடர்பு
