wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆண்டுதோறும் கவியழகி, பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடையும் உணவும் வழங்க விரும்புவாள்.

a)

ஆறுவது சினம்

b)

இயல்வது கரவேல்

c)

அறம் செய்ய விரும்பு

d)

ஈவது விலக்கேல்

2.

இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.

a)

ஒப்புர ஒழுகு

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஐயமிட்டு உண்

d)

ஏற்பது இகழ்ச்சி

3.

கீழ்க்காண்பனவற்றுள் எது ஆத்திசூடி அல்ல எனத் தெரிவு செய்க.

a)

ஔவியம் பேசேல்

b)

உடையது விளம்பேல்

c)

ஒப்புர வொழுகு

d)

எண்ணுவது உயர்வு

4.

கணிதப் பாடத்தில் ஆர்வமே இல்லாமல் இருந்த வசந்தியிடம், வாழ்வில் முன்னேற கணிதம் மற்றும் மொழிப்பாடம் ஆகிய இரண்டுமே முக்கியம் என்பதை அவள் ஆசிரியர் விளக்கினார்.

a)

ஓதுவ தொழியேல்

b)

எண்ணெழுத் திகழேல்

c)

ஒப்புர வொழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

5.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆத்திசூடி யாவை?

a)

ஓதுவ தொழியேல், ஈவது விளக்கேல்

b)

எண்ணெழுத் திகழேல், அறம் செய்ய விரும்பு

c)

ஓதுவ தொழியேல், எண்ணெழுத்திகழேல்

d)

ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண்

6.

கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.

( இயல்வது கரவேல்)

a)

தடுக்கக் கூடாது

b)

மறைக்கக் கூடாது

c)

கைவிடக் கூடாது

d)

நினைக்கக் கூடாது

7.

கொடுக்கப்பட்டுள்ள ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.

( ஏற்பது இகழ்ச்சி)

a)

நம்மிடம் உள்ள செல்வம் அல்லது கல்வியைப் பற்றி பிறரிடம் தற்பெருமையாகப் பேசக்கூடாது

b)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்

c)

உழைப்பின்றி பிறர் கொடுப்பதை ஏற்றுக் கொள்வது இழிவானச் செயலாகும்

d)

பொறாமைக் கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது

8.

கொடுக்கப்பட்டுள்ள புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.

( இளைத்தல் இகழ்ச்சி)

a)

துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.

b)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்கவேண்டும்

c)

ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்

d)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்

9.

கீழ்க்காண்பனவற்றுள் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

உடையது விளம்பேல்

b)

ஏறுபோல் நட

c)

ஊக்கமது கைவிடேல்

d)

இயல்வது கரவேல்

10.

கொடுக்கப்பட்டுள்ள புதிய ஆத்திசூடியின் பொருளைத் தெரிவு செய்க.

( ஓய்தல் ஒழி)

a)

காலம் கிடைத்தற்கரியது; அதனை வீணில் கழித்து விட வேண்டாம்.

b)

துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்

c)

ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்

d)

எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பதைத் தவிர்த்துவிடு.