Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குன்றியவினை & குன்றாவினை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியங்களுள் எது குன்றியவினை வாக்கியமாகும்?

a)

கலைவாணி வீணை மீட்டினாள்

b)

பெருமாள் பக்தர்களுக்கு உதவினார்

c)

மோகினி நன்றாகக் கற்றாள்

d)

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடினார்

2.

பின்வருவனவற்றுள் குன்றாவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

மீன் நீந்துகிறது

b)

இளையராஜா இசைத்தார்

c)

குழந்தை சிரித்தது

d)

மான் ஓடியது

3.

குன்றியவினை வாக்கியங்களை அடையாளமிடுக.

a)

அருவி மலையிலிருந்து வீழ்ந்தது.

b)

கோவலன் தன் செல்வங்களை இழந்தான்.

c)

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

d)

மான்குட்டி அங்கும் இங்கும் ஓடியது.

4.

கீழ்க்காணும் வாக்கியங்களுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இடியோசையைக் கேட்டு குமுதமலர் பயந்தாள்.

b)

குயவன் மண்ணைக் குழைத்து குடம் செய்தான்.

c)

தாகத்தைத் தணிக்க தயாளன் இளநீர் அருந்தினான்.

d)

தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற இளவரசு இரவும் பகலும் படித்தான்.

5.

கீழ்க்காண்பவற்றுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

குமார் அதிகாலையில் எழுவான்

b)

கமலா குப்பையக் கூட்டினாள்

c)

தந்தை பொறி வைத்து எலி பிடித்தார்.

d)

மாலா பூக்களைப் பறித்துச் சரம் தொடுத்தாள்.

6.

கீழ்க்காணும் வாக்கியங்களில் குன்றாவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

பாலன் கோயிலுக்குச் சென்றான்.

b)

முழுமனதோடு கடவுளை வணங்கினான்.

c)

அன்றைய சிறப்புப் பூசைக்காகக் காத்திருந்தான்.

d)

பக்தர்கள் சிலர் காவடி எடுப்பார்கள்.

7.

குன்றியவினையைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

வினை முற்றுப்பெறுவதற்கு இன்னொரு சொல்லை எதிர்நோக்கி இருக்கும்.

b)

வாக்கியத்தில் செயப்படுபொருளை ஏற்காத வினைமுற்று.

c)

ஒரு பொருளைக் குறித்த பல சொற்களாக இருக்கும்

d)

சந்தி, சாரியை, விகாரம் என மூன்று கூறுகள் கொண்டது

8.

மிகச் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

சிங்கம் கர்ஜித்தது - குன்றியவினை

b)

இராஜேஸ்வரி மீட்டினாள் - குன்றியவினை

c)

ஆனந்தன் மகிழ்ந்தார் - குன்றாவினை

d)

சங்கர் எழுதினார் - குன்றாவினை

9.

ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருளை ______________________ வினைமுற்றைக் குன்றியவினை என்பர்.

a)

ஏற்ற

b)

ஏற்காத

10.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான குன்றாவினை வாக்கியகியங்களைத் தேர்வு செய்க.

a)

சேவல் அதிகாலையில் கூவும்.

b)

மான் துள்ளிக் குதித்தது.

c)

எழிலன் தாயை வணங்கினான்.

d)

மீனவர் வலை வீசி மீன் பிடிப்பார்.