wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BTT5 MOLIYANI

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் திருக்குறளின் கருத்தைத் தெரிவு செய்க.


இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

a)

காலம் கடத்துதல், மறதி,சோம்பல், அதிக தூக்கம் ஆகியவை ஒருவரின் முன்னேற்றத்தைத் தடை செய்யும்.

b)

தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதே உண்மையான நட்பு ஆகும்.

c)

தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்வதே சான்றோரின் பண்பு.

2.

பொருள் தருக


நெடுநீர்

a)

சோம்பல்

b)

காலம் கடத்துதல்

c)

அதிக தூக்கம்

3.

பொருள் தருக


கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை

a)

கூர்விழியுடைய நாட்டியப் பெண்கள் ஆடலரங்கத்திற்கு அழகு செய்ய..

b)

மயில்கள் மரக்கிளைகளில் நாட்டியமாடவும்

c)

அன்னப்பறவையானது தாமரை மலர்களினின்று துயில் எழவும்

4.

பொருளுக்கேற்ற செய்யுள் அடியைத் தெரிவு செய்க


எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே, எல்லாரும் நம் சுற்றத்தார்களே

a)

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

b)

தீதும் நன்றும் பிறர்தர வாரா

c)

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

5.

தொல்காப்பியர் மூன்றறிவு என எதனைக் குறிப்பிடுகிறார்?

a)

உடம்பு, வாய், மூக்கு ஆகியவற்றால் அறியும் அறிவு

b)

உடம்பு, வாய், கண் ஆகியவற்றால் அறியும் அறிவு

c)

உடம்பு, வாய், செவி ஆகியவற்றால் அறியும் அறிவு

6.

சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க


வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகமாகவுள்ள இடத்தில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகக் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

a)

தயவு தாட்சணியம்

b)

விருப்பு வெறுப்பு

c)

சண்டை சச்சரவு

7.

மரபுத் தொடருக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


வெள்ளிடைமலை

a)

தெளிவாகப் புலனாவது

b)

ஆசை வார்த்தை கூறுதல்

c)

நுணுக்கங்கள்

8.

பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


முன்னர் நாம் செய்த செயலின் பலனைப் பின்னர் நாம் அடைவது உறுதியாகும்.நன்மை செய்யின் நன்மை விளையும்; தீமை செய்யின் தீமை விளையும்.

a)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

9.

சூழலுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


எதிர்பாராத விதமாக இரு இலகு ரயில்கள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டபோது அதில் பயணித்தப் பயணிகள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

a)

மாலுமி இல்லாத கப்பல் போல

b)

சிறகு இழந்த பறவை போல

c)

கொழு கொம்பற்ற கொடி போல

10.

பெரியோரை வியத்தலும் இலமே


என்ற அடி இடம் பெற்ற செய்யுள்...

a)

கம்ப இராமாயணம்

b)

புறநானூறு

c)

தொல்காப்பியம்