wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உந்துவிசை ஆண்டு 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உராய்வு உந்துவிசை என்றால் என்ன?

a)

தள்ளும் சக்தி

b)

இழுக்கும் சக்தி

c)

தள்ளுதலும் இழுத்தலும்

d)

இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடு மற்றொன்று தொடும் போது ஏற்படும் உந்துவிசை

2.

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? (மூன்று பதில்கள்)

a)

பொருள்களைத் தள்ளுதலும் இழுத்தலும் உந்துவிசையாகும்.

b)

உந்துவிசையை நம்மால் பார்க்க இயலாது.

c)

உந்துவிசையால் ஏற்படும் விளைவை உணரலாம்.

d)

உந்துவிசையின் விளைவை உணர முடியாது; ஆனால், அதனை நாம் பார்க்கலாம்.

3.

இழுத்தல் உந்துவிசையைக் காட்டும் படத்தைத் தேர்வு செய்யவும்.

a)
b)
c)
d)
4.

தள்ளுதல் உந்துவிசையைக் காட்டும் படங்கள் எவை?

a)
b)
c)
d)
5.

கீழ்க்காணும் படங்களில் எவை தள்ளுதல் மற்றும் இழுத்தல் உந்துவிசையைக் காட்டுகின்றது?

a)
b)
c)
d)
6.

படத்தின் துணையுடன், ஒரு ஊகித்தலை அடையாளம் காண்க.

a)

உந்துவிசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும்.

b)

உந்துவிசை ஒரு பொருளின் திசையை மாற்றும்.

c)

உந்துவிசை நகரும் பொருளின் வேகத்தைக் குறைக்கும்.

d)

உந்துவிசை நிலையான பொருளை நகர்த்தும்.

7.

கீழ்க்காணும் படங்களில் எது உந்துவிசையின் விளைவு அல்ல?

a)
b)
c)
d)
8.

ஒரு மகிழுந்து சாலையில் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் மரத்தை மோதியது. மகிழுந்தின் வட்டயத்தைப் படத்தில் காணலாம். விபத்திற்கான காரணத்தை ஊகிக்கவும்.

a)

மகிழுந்தின் வட்டயம் தேய்ந்து போயிருக்கலாம்.

b)

பழைய மகிழுந்தாக இருக்கலாம்.

c)

புதிய ஓட்டுனராக இருக்கலாம்.

d)

வாகனம் பழுதடைந்து இருக்கலாம்.

9.

கீழ்க்காணும் மேற்பரப்புகளில், எந்த மேற்பரப்பில் கோலி மெதுவாகச் செல்லும்?

a)

கண்ணாடி

b)

சிமெண்டு

c)

நாளிதழ்

d)

மணல்

10.

பந்து 1: 5 வினாடிகளில் இலக்கை அடைந்தது.


பந்து 2: 10 வினாடிகளில் இலக்கை அடைந்தது.


மேற்காணும் ஆய்வில் ஒரே வகையான இரண்டு பந்துகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் துணையுடன் ஒரு ஊகித்தலை அடையாளம் காண்க.

a)

பந்து 1 கண்ணாடி மேற்பரப்பிலும் பந்து 2 மணல் மேற்பரப்பிலும் சென்றிருக்கலாம்.

b)

பந்து 1 மற்றும் பந்து 2 ஆகியவை கண்ணாடி மேற்பரப்பில் சென்றிருக்கலாம்.

c)

பந்து 1 மணல் மேற்பரப்பிலும் பந்து 2 கண்ணாடி மேற்பரப்பிலும் சென்றிருக்கும்.

d)

பந்து 1 பலகை மேற்பரப்பிலும் பந்து 2 கண்ணாடி மேற்பரப்பிலும் சென்றிருக்கலாம்.

11.

மேசையில் தன்னை நோக்கி செலுத்தப்பட்ட பிங் பொங் பந்தை அமுதா நண்பனை நோக்கி ஊதினாள். இது உந்துவிசையின் எவ்விளைவைக் காட்டுகிறது?

a)

உந்துவிசை பொருளின் திசையை மாற்றும்.

b)

உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.

c)

உந்துவிசை பொருளின் வேகத்தைக் குறைக்கும்.

d)

உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.

12.

கீழ்க்காண்பனவற்றுள் எவை உராய்வினால் ஏற்படும் நன்மைகள்?

a)

நாம் கீழே வழுக்கி விழாமல் நடக்க உதவுகிறது.

b)

நெருப்பை உண்டாக்க உதவுகிறது.

c)

மகிழுந்தை நிறுத்த உதவுகிறது.

d)

கத்தியை கூர்மையாக்க உதவுகிறது.

13.

கீழ்க்காண்பனவற்றுள் எது உராய்வினால் ஏற்படும் தீமை அல்ல?

a)

இயந்திரப் பகுதிகள் பழுதடைதல்.

b)

மகிழுந்தின் வட்டயம் தேய்மானம் அடைதல்.

c)

காலணி தேய்மானம் அடைதல்.

d)

குளிர் காலத்தில் வெப்பத்தை உண்டாக்க உதவுகிறது.

14.

ஐந்து வருடம் பயன்படுத்தியப் பிறகு கதவின் நாதாங்கி சத்தத்தை ஏற்படுகிறது. இச்சிக்கலை எவ்வாறு களையலாம்?

a)

நாதாங்கியில் மாவுத் தூளைத் தூவுதல்.

b)

நாதாங்கியில் எண்ணெய் விடுதல்.

c)

நாதாங்கியைக் கழுவலாம்.

d)

நாதாங்கியில் முகப்பூச்சைப் பூசலாம்.

15.

கேரம் பலகையில் ஏன் மாவுத்தூளைத் தூவுகின்றனர்?

a)

உராய்வைக் குறைக்க

b)

உராய்வை அதிகரிக்க

c)

சொரசொரப்பை அதிகரிக்க

d)

அது கேரம் விளையாட்டின் விதிமுறையாகும்.