Worksheetsகுற்றியலுகரம்
Total questions: 20
Worksheet time: 20mins
குற்றியலுகரத்தில் எந்த உகரம் சொல்லின் இறுதியில் வந்தால் குறுகி ஒலிக்கும்?
மகர உகரம்
இடையின உகரம்
வல்லின உகரம்
மெல்லின உகரம்
வல்லின உகரங்கள் யாவை?
கு,டு,து,பு, லு,மு
சு,டு,து,பு,று,கு
கு,சு,டு,வு,மு,லு
கு,சு,டு,து,பு,ரு
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
3
4
5
6
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது குற்றியலுகரம் அல்ல?
குறில்தொடர் குற்றியலுகரம்
நெடில்தொடர் குற்றியலுகரம்
வன்தொடர் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
இஃது இரண்டே எழுத்துக்களில் வரும். முதல் எழுத்து நெட்டெழுத்தாக அமையும்.
மேலே கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற சரியான குற்றியலுகரத்தைத் தெரிவு செய்க.
நெட்டெழுத்து குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர் குற்றியலுகரம்
கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் நெடில்தொடர் குற்றியலுகரத்தைத் தெரிவு செய்க.
மாடு, வீடு
காடு, தொடு
மேடு, கொடு
விடு, சுடு
வன்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?
ஒரு சொல்லில் கடைசி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து வல்லின உகரமாக இருக்கும்.
ஒரு சொல்லில் கடைசி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து வல்லின மெய்யாக இருக்கும்.
ஒரு சொல்லில் கடைசி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து வல்லின உயிர்மெய்யாக இருக்கும்.
சரியான வன்தொடர்க் குற்றியலுகர எடுத்துக்காட்டைத் தெரிவு செய்க.
கன்று, பட்டு
கத்து, அன்று
செய்து, பெற்று
கூட்டு, பாட்டு
வன்தொடர்க் குற்றியலுகரத்தில் வல்லின உகரத்திற்கு முன் வரும் வல்லின மெய் எழுத்துக்கள் யாவை?
க்,ச்,ட்,த்,ப்,ற்
க்,ல்,ட்,த்,ப்,ற்
க்,ச்,ட்,த்,ப்,ர்
ஈற்றுக்கு அயல் எழுத்து (கடைசி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து) மெல்லின மெய்யாக இருந்தால் அஃது எவ்வகை குற்றியலுகரம் ஆகும்?
மெல்லின தொடர் குற்றியலுகரன்
வல்லின குற்றியலுகரம்
மென் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
கீழே கருமையாக்கப்பட்ட சொல் எவ்வகையைச் சேர்ந்த குற்றியலுகரம் என்பதை தேர்ந்தெடுத்திடுக.
வாக்கு தவறியதால் பணத்தில் பங்கு கிடைக்கவில்லை.
மென்தொடர்க் குற்றியலுகரம் - வன்தொடர்க் குற்றியலுகரம்
இடைதொடர்க் குற்றியலுகரம் - வன்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம் - மென்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம் - நெடில்தொடர்க் குற்றியலுகரம்
செய்து, சார்பு என்ற சொற்கள் எந்த வகை குற்றியலுகரத்தைச் சேர்ந்தது?
மென்தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
இடைதொடர்க் குற்றியலுகரம்
கீழே கொடுக்கப்பட்டச் சொற்களுல் உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தைத் தெரிவு செய்க.
பரிசு, முதுகு, உருபு
கற்று, விட்டு, சென்று
பாட்டு, பட்டு, தொட்டு
செய்து, கொய்து, மேய்து
பரிசு என்ற சொல் எவ்வாறு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்?
பரிசு என்ற சொல்லின் இறுதியில் வல்லின உகரம் வருவதால்
பரிசு என்ற சொல்லில் வல்லின உகரத்திற்கு முன் வரும் ரி என்ற எழுத்து ர்+ இ இணைந்து ரி என்ற எழுத்தாக வருவதால்
ஈற்றுக்கு அயல் எழுத்து ஆய்த எழுத்தாக வந்தால் அஃது ஆய்தத்தொடர் குற்றியலுகரம் ஆகும்.
சரி
தவறு
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிர்மெய் எழுத்துகளுல் வந்தால் அஃது எவ்வகைக் குற்றியலுகரம் ஆகும்.
வன்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்மெய்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்எழுத்துதொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தைத் தெரிவு செய்க.
அக்து
எஃகு
போக்கு
அரிவாள்
மென்தொடர்க் குற்றியலுகரமும் உயிர்தொடர்க் குற்றியலுகரமும் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வெண்ணிலா கதை எழுதி விருதுப் பெற்றாள்.
துவியோகன் வண்டு பிடிக்கப் பாட்டு பாடினான்.
இலக்கியா கயிறு வாங்குவதற்குக் காசு கேட்டாள்.
தம்பி உதைத்தப் பந்து பட்டதால் முதுகு வலி வந்தது.
எஃகு, அம்பு, எய்து, எட்டு, நூறு, பரிசு
மேலே கொடுக்கப்பட்ட சொற்களின் வரிசைப்படி குற்றியலுகரத்தைத் தெரிவு செய்க.
ஆய்தத்தொடர், வன்தொடர், மென்த்தொடர், வன்தொடர், நெடில்தொடர், உயிர்த்தொடர்
ஆய்தத்தொடர், மென்தொடர், இடைத்தொடர், வன்தொடர், நெடில்தொடர், உயிர்த்தொடர்
ஆய்தத்தொடர், வன்தொடர், இடைத்தொடர், மென்தொடர், நெடில்தொடர், உயிர்த்தொடர்
கீழ்க்காண்பவற்றுள் குற்றியலுகரத்தைப் பற்றிய பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.
i. குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
ii. தனிக்குறிலை அடுத்து வந்தால் குற்றியலுகரம் ஆகும்.
iii. வல்லின உகரங்கள் சொல்லின் ஈற்றில் குறுகி ஒலிக்கும்.
iv. குற்றியலுகரம் தனிக்குறிலை அடுத்து வராது.
i, ii, iii, iv
i, iii, iv
i, ii, iv
i & iii
