wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 5

Total questions: 18

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பழமொழியை நிறைவு செய்யவும்.


.............. வருமுன் அணைபோடு

a)

வெயில்

b)

வெள்ளம்

c)

பள்ளம்

2.

பழமொழியை நிறைவு செய்யவும்.


ஆழம் .............. காலை ..............

a)

அறிந்து , விடாதே

b)

அறியாமல் , விடாதே

c)

அறியாமல் , விடு

3.

பழமொழியை நிறைவு செய்யவும்.


ஆற்றிலே ஒரு கால் _________________________________

a)

சேற்றில் ஒரு கால்

b)

சேற்றிலே ஒரு கால்

4.

பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


வெள்ளம் வருமுன் அணைபோடு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.

c)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

5.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக எல்லாப் பாடஙக்ளையும் மீள்பார்வை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே தோல்வி என்பது நம்மை நெருங்காது.

a)

வெள்ளம் வருமுன் அணைபோடு

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

6.

கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?


ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!


மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

7.

கீழ்க்கண்ட பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானகப் பிறக்கும்.

8.

சூழலுக்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்க.


எல்லாப் பாடங்களையும் திறம்படக் கற்க முடியும் என்று மனவுறுதியுடன் செயல்பட்டால் நிச்சயம் அதற்கான வழிகளும் பயனும் கிட்டும்.

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

9.

பழமொழியை நிறைவு செய்யவும்.


மனம் .............. மார்க்கம் ..............

a)

உண்டானால், இல்லை

b)

உண்டானால், உண்டு

c)

கண்டாயானால், உண்டு

10.

1. ___________________ காலை விடாதே

a)

ஆழம் தெரியாமல்

b)

ஆழம் அறியாமல்

c)

ஆற்றில் ஒரு கால்

d)

சேற்றில் ஒரு கால்

11.

4. நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்

d)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

12.

5. விவசாயம் தொழில் பற்றி தெரியாமல் அந்தத் தொழில் ஈடுபட்ட திரு.முரளி தோல்வி கண்டார்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

ஆழம் அறியாமல் காலை விடாதே

d)

நிழலின் அருமை மழையில் தெரியும்.

13.

7.ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் காரியம் சிறப்பாகச் செய்ய முடியாது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

ஆற்றில் ஒரு கால் சேற்றில் மற்றொரு கால்

d)

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

14.

கீழ்க்காண்பனவற்றுள் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி யாது ?

a)

A. சிக்கனம் சீரளிக்கும்

b)

B. சிறுதுளி பெருவெள்ளம்

c)

C. வெள்ளம் வருமுன் அணைபோடு

d)

D. அறிவுடையாரை அரசனும் விரும்பும்

15.

படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.

a)

A. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

b)

B. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

C. தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா ?

d)

D. சிறு துரும்பும் பல் குத்த உதவும்

16.

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்


ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் ________________________

a)

எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது

b)

எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியும்

17.

நாம் ஈடுப்படும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

18.

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

a)

பலவான் புத்திமான்

b)

புத்திமான் பலவான்