wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புறநானூறு

Total questions: 13

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

செய்யுளடியில் விடுபட்டச் சொல்லைத் தேர்ந்தெடு.


யாதும் _______; யாவரும் ___________

____________ நன்றும் பிறர்தர ________;

a)

தீதே, கேளிர், தீதும், வாரூம்

b)

ஊரே, கேளாய், நன்றும், வாரா

c)

ஊரே, கேளிர், தீதும், வாரா

2.

செய்யுளடியில் விடுபட்டச் சொல்லைத் தேர்ந்தெடு.


நோதலும் _____________ ________________ ரன்ன:

சாதலும் __________ அன்றே; வாழ்தல்

a)

சோதலும், அவனோ, பிழைத்தலும்

b)

தணிதலும், அவற்றோ, புதுவது

c)

தணிதலும், அவற்றே, புதைவது

3.

செய்யுளடியில் விடுபட்டச் சொல்லைத் தேர்ந்தெடு.


_______________ மகிழ்ந்தன்றும் ___________; முனிவின்,

இன்னா ___________________ இலமே; '______________

a)

இனிதுஎன , தலைஇ, வானம், பேர்யாற்று

b)

கல்பொருது, படூஉம், இலமே, மாட்சியின்

c)

இனிதுஎன, இலமே, தென்றலும், மின்னொடு

4.

செய்யுளடியில் விடுபட்டச் சொல்லைத் தேர்ந்தெடு.

______________ ______________ தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் _________________ ____________

a)

வானம், தண்துளி, மல்லற், பேர்யாற்று

b)

கல்பொருது, படூஉம், இலமே, மாட்சியின்

c)

இனிதுஎன, இலமே, தென்றலும், மின்னொடு

5.

செய்யுளடியில் விடுபட்டச் சொல்லைத் தேர்ந்தெடு.

நீர்வழிப் படூஉம் ______________ , __________________

முறைவழிப் படூஉம் ' _________________ ____________

a)

வானம், தண்துளி, மல்லற், பேர்யாற்று

b)

புணைபோல், ஆருயிர், என்பது, திறவோர்

c)

இனிதுஎன, இலமே, தென்றலும், மின்னொடு

6.

செய்யுளடியில் விடுபட்டச் சொல்லைத் தேர்ந்தெடு.

______________ __________________ ஆகலின், மாட்சியின்

_________________ ____________ இலமே;

சிறியோரை ____________ அதனினும் இலமே.

a)

இன்னா, தண்துளி, பெரியோரை, பேர்யாற்று, இகழ்தல்

b)

மகிழ்ந்தன்றும், தெளிந்தனம், புணைபோல், வியத்தலும், இலமே

c)

காட்சியின், தெளிந்தனம், பெரியோரை, வியத்தலும், இகழ்தல்

7.

செய்யுளடிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு.


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

a)

அனைத்தும் நம்மாலேயே விளைவனவாகும்

b)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை

c)

எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே. எல்லாரும் எம் சுற்றத்தார்களே

8.

செய்யுளடிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு.


தீதும் நன்றும் பிறர்தர வாரா;

a)

அனைத்தும் நம்மாலேயே விளைவனவாகும்

b)

எமக்கு உண்டாகும் துன்பமும் நன்மையும் பிறர் கொடுப்பதால் வருவன அல்ல

c)

எமக்கு உண்டாகும் துன்பமும் நன்மையும் பிறர் கொடுப்பதால் வருவன அல்ல. அனைத்தும் நம்மாலேயே விளைவனவாகும்.

9.

செய்யுளடிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு.


நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே;

a)

உலகத்தில் இறத்தல் என்பது புதுமையானது அன்று கருவில் தோன்றிய நாள் முதல் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

b)

உலகத்தில் இறத்தல் என்பது புதுமையானது அன்று

c)

எமக்கு உண்டாகும் துன்பமும் நன்மையும் பிறர் கொடுப்பதால் வருவன அல்ல. அனைத்தும் நம்மாலேயே விளைவனவாகும்.

10.

செய்யுளடிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு.


வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே

a)

உலகத்தில் இறத்தல் என்பது புதுமையானது அன்று கருவில் தோன்றிய நாள் முதல் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

b)

வாழ்க்கை இனிதென்று மகிழ்ந்ததும் இல்லை; ஒரு வெறுப்பு வந்ததும் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுக்குதலும் இல்லை

c)

எமக்கு உண்டாகும் துன்பமும் நன்மையும் பிறர் கொடுப்பதால் வருவன அல்ல. அனைத்தும் நம்மாலேயே விளைவனவாகும்.

11.

செய்யுளடிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு.


மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும்

a)

சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை

b)

மின்னலினால் பெருமழை தோன்றும். அதன் பயனால் ஆறு கல்லை உருட்டி ஒலிக்கும்.

c)

அது போன்றே, பெரிய ஆற்றில் செல்லும் மிதவை போல இவ்வுயிரானது ஊழ்வினை செலுத்தும் வழியில் செல்வதாகும்.

12.

செய்யுளடிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு.


மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம்’ புணைபோல், ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம்

a)

அது போன்றே, பெரிய ஆற்றில் செல்லும் மிதவை போல

b)

இவ்வுயிரானது ஊழ்வினை செலுத்தும் வழியில் செல்வதாகும்

c)

அது போன்றே, பெரிய ஆற்றில் செல்லும் மிதவை போல இவ்வுயிரானது ஊழ்வினை செலுத்தும் வழியில் செல்வதாகும்.

13.

செய்யுளடிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு.


ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

a)

ஆகையால், சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை.

b)

சிறுமையுடையோராய்த்

தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை

c)

ஆகையால், சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை. சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக்

கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை