Worksheetsவினா வாக்கியம்
Total questions: 10
Worksheet time: 8mins
கீழே உள்ளவற்றில் எது வினாச் சொல்?
எப்படி
அவ்வாறு
குழப்பம்
இடத்தை குறித்து கேட்கும் கேள்வியில் எந்த சொல் இடம் பெறும்?
ஏன்
அதற்கு
எங்கு
கடந்த சனிக்கிழமை மாலதி பிறந்த நாள் விழாவிற்குச் சென்றாள்.
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற கேள்வியைத் தெரிவு செய்க.
ஏன் மாலதி பிறந்த நாள் விழாவிற்குச் சென்றாள்?
எப்பொழுது மாலதி பிறந்த நாள் விழாவிற்குச் சென்றாள்?
எவ்வாறு மாலதி பிறந்த நாள் விழாவிற்குச் சென்றாள்?
" சிவா, ____________ இந்த பொம்மையை உருவாக்கினாய்?"
எந்த
யார்
எவ்வாறு
படத்திற்கு ஏற்ற சரியான கேள்வியை தெரிவு செய்க.
பாலன் எப்படி இருக்கிறான்?
பாலன் என்ன செய்கிறான்?
பாலன் எங்கு நிற்கிறான்?
படத்திற்கு ஏற்ற சரியான கேள்வியை தெரிவு செய்க.
சீத்தா என்ன செய்கிறாள்?
சீத்தா எவ்வளவு செய்கிறாள்?
சீத்தா எத்தனை செய்கிறாள்?
காலத்தை ஒட்டிய வினாச் சொல் எது?
ஏன்
எவ்வாறு
எப்பொழுது
வினச் சொல் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
கேள்வி எழுப்ப பயன்படுத்தப்படுகிறது
பதில் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.
தகவல் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.
நாதனுக்கு காய்ச்சல் அடித்ததால் பள்ளிக்கு வரவில்லை.
கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற கேள்வி எது?
நாதன் எங்கு வரவில்லை?
நாதன் ஏன் பள்ளிக்கு வரவில்லை?
நாதன் எப்படி பள்ளிக்கு வரவில்லை?
வினா வாக்கியத்தின் கடைசியில் இட வேண்டிய குறி எது?
முற்றுப் புள்ளி
கேள்விக்குறி
காற்புள்ளி
