Font size
Worksheetsபடிவம் 5 இலக்கணம் பெயரெச்சம் வினையெச்சம்
Total questions: 20
Worksheet time: 11mins
1. பெயரெச்சங்களை அடையாளம் காணக.
அ. வாடிய பயிர்
ஆ. ஓடிய பையன்
இ. பிடித்துக் கொடு
ஈ. எடுத்துச் சொல்
உ. படித்த புத்தகம்
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பெயரெச்ச சொல்லை அடையாளங்காண்க.
அ. குடித்த நீர்
ஆ. கடித்துத் தின்றான்
இ. கூடிப் பேசினர்
ஈ. ஆடிப் பாடு
3. பெயரெச்சம்
பறந்த பறவை
அ. தவறு
ஆ. சரி
4. இதில் எது எதிர்மறை பெயரெச்சம்?
அ. ஓடா குதிரை
ஆ. ஓடிய குதிரை
இ. ஓடாத குதிரை
ஈ. ஓடும் குதிரை
5. பெயரெச்சத்தின் பின் வலிமிகும்.
அ. சரி
ஆ. தவறு
6. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தை அடையாளங்காண்க.
அ. வாடா மலர்
ஆ. வாடிய மலர்
இ. வாடாத மலர்
ஈ. வாடுகின்ற மலர்
7. எழுதிய கதை என்பது வினையெச்சம்.
அ. தவறு
ஆ. சரி
8. நல்ல பையன், அழகிய ரோஜா, சிறிய குடிசை இவை
அ. குறிப்பு வினையெச்சம்
ஆ. குறிப்புப் பெயரெச்சம்
9. பாடிய பாடல் என்பது வினையெச்சம்.
அ. தவறு
ஆ. சரி
10. பேசிய தலைவன் என்பது பெயரெச்சம்.
அ. சரி
ஆ. தவறு
11. வினையெச்சம் மூன்று காலங்களையும் காட்டாது.
அ. சரி
ஆ. தவறு
12. படித்துப் பார்த்தான், எழுந்து வந்தான் என்பவை
அ. பெயரெச்சம்
ஆ. வினையெச்சம்
13. சிரித்துப் பேசினான் என்பது
அ. பெயரெச்சம்
ஆ. வினையெச்சம்
14. இதில் எது முற்றெச்சம் அல்ல?
அ. ஓடினன் வீழ்ந்தான்
ஆ. படித்தனன் தேறினான்
இ. எழுதினன் முடித்தான்
ஈ. எழுதிய புத்தகம்
15. எதிர்மறை வினையெச்சத்தை அடையாளங்காண்க.
அ. உண்ணாது உறங்கினான்
ஆ. நிற்காமல் சென்றான்
16. இதில் எது பெயரெச்ச வகை அல்ல?
அ. ஓடாத குதிரை
ஆ. ஓடிய குதிரை
இ. ஓடுகின்ற குதிரை
ஈ. ஓடாக் குதிரை
17. இதில் எது பெயரெச்சம்?
அ. பேசாது உண்டான்
ஆ. ஆடிப் பாடினான்
இ. படித்த புத்தகம்
ஈ. வேகமாக ஓடினான்
18. இதில் எது வினையெச்சம்?
அ. பேசிய பையன்
ஆ. ஓடிய வண்டி
இ. வாழ்த்திச் சென்றான்
ஈ. விளையாடிய பந்து
19. விளைகின்ற பயிர் என்பது
அ. பெயரெச்சம்
ஆ. வினையெச்சம்
20. ஆடிய குழந்தை என்பது
அ. வினையெச்சம்
ஆ. பெயரெச்சம்
