wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆத்திச்சூடி

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

மேற்காணும் படம் எந்த புதிய ஆத்திச்சூடிக்குத் தொடர்புடையது?

a)

ஈகை திறன்

b)

உடலினை உறுதி செய்

c)

ஆண்மை தவறேல்

d)

எண்ணுவது உயர்வு

2.

கீழ்க்காணும் புதிய ஆத்திச்சூடியின் பொருளை எது காட்டுகின்றது?

'ஏறுபோல் நட'

a)

அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

b)

பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும்

c)

கூர்மையாகச் சிந்திக்க வேண்டும்

d)

உண்மையை மட்டும் பேச வேண்டும்

3.

ராமு எந்த நேரமும் தைரியத்தோடு நடந்து கொள்வான்.


மேற்கண்ட சூழலுக்குப் பொருந்தும் புதிய ஆத்திச்சூடியைத் தேர்ந்தெடுக்கவும்

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஈகை திறன்

c)

ஏறுபோல் நட

d)

ஐம்பொறி ஆட்சிக்கொள்

4.

வாழ்வில் தான் முன்னேற வேண்டும் என ராஜா நினைத்துக் கொண்டான்.


இதற்கு ஏற்ற புதிய ஆத்திச்சூடி எவை?

a)

அறம் செய்ய விரும்பு

b)

ஏறுபோல் நட

c)

எண்ணுவது உயர்வு

d)

அச்சம் தவிர்

5.
இளைத்தல் இகழ்ச்சி’’
எனும் புதிய ஆத்திச்சூடியின் பொருள் என்ன?
a)
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்
c)
உடல் மெலிந்திருப்பவரைக் கேலி செய்வது இழிவாகும்
d)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்
6.
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
கணபதி, உணவை பெரும்பாலான சிறுவர்களைப் போல தனக்கு அது வேண்டாம்; இது வேண்டாம்; இது பிடிக்காது; தனக்கு இதுதான் வேண்டும் என்ற பிடிவாதம் பிடிப்பவன் அல்லன். தன் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டுதான் தாயார் சமைத்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் சாப்பிடுவான்
a)
உடலினை உறுதி செய்
b)
ஊண்மிக விரும்பு
c)
ஐம்பொறி ஆட்சிகொள்
d)
ஒளடதம் குறை
7.
சோம்பலையும் சோர்வையும் தவிர்ப்பதை உணர்த்தும் செய்யுள்களைத் தெரிவு செய்க.
i.ஆண்மை தவறேல்
ii. இளைத்தல் இகழ்ச்சி
iii. ஓய்தல் ஒழி
iv. அச்சம் தவிர்
a)
i , ii
b)
ii , iii
c)
iii , iv
d)
i , iv
8.
கீழ்க்காணும் கவிதையின் இறுதி வரிகளை உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
உடலினை உறுதி உடையவரே உலகில் எல்லாம் உடையவராம் மருந்தும் விருந்தும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமா?  
a)
உடலினை உறுதி செய்
b)
ஊண்மிக விரும்பு
c)
ஏறுபோல் நட
d)
ஒளடதம் குறை
9.
மருத்துவர் மு.கலைவாணியின் கருத்துக்கு ஏற்ற செய்யுளைத் தேர்வு செய்க.
சிறு சிறு நோய்களுக்கு மருந்து உட்கொள்வது பாதிப்பை உண்டாக்கும்
a)
ஔடதம் குறை
b)
ஊண்மிக விரும்பு
c)
உடலினை உறுதிசெய்
d)
எண்ணுவது உயர்வு  
10.
கீழ்க்காணும் படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
a)
இளைத்தல் இகழ்ச்சி
b)
உடலினை உறுதிசெய்
c)
ஊண்மிக விரும்பு
d)
ஏறுபோல் நட
11.
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய  ஆத்திசூடி அல்ல?
a)
ஈவது விலக்கேல்
b)
எண்ணுவது உயர்வு
c)
உடலினை உறுதி செய்
d)
ஊண்மிக விரும்பு  
12.
கீழ்க்காண்பனவற்றுள் ஏற்ற வீரத்தைக் குறிக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
a)
ஐம்பொறி ஆட்சிக்கொள்
b)
ஒற்றுமை வலிமையம் 
c)
ஔடதம் குறை
d)
ஆண்மை தவறேல்
13.
இக்கூற்றுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

அம்மா! சும்மா எடுத்ததெற்கெல்லாம் மருந்து சாப்பிடாதிங்க.
a)
ஊண்மிக விரும்பு
b)
ஔடதம் குறை
c)
ஈகை திறன்
d)
ஏறுபோல் நட
14.
மாலதி,________________நொறுக்குத்தீனி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வுணவுகள் உடல் நலத்தைக் கெடுக்கும்.
a)
ஊண்மிக விரும்பு
b)
கற்றது ஒழுகு
c)
ஈகை திறன்
d)
உடலினை உறுதி செய்
15.
புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஓய்தல் ஒழி தவிர்த்துவிடு 
a)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பதைத் தவிர்த்துவிடு
b)
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும் 
c)
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்
d)
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்
16.
கீழ்க்காணும் படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
a)
ஆண்மை தவறேல் 
b)
உடலினை உறுதி செய்
c)
ஐம்பொறி ஆட்சிகொள்
d)
ஓய்தல் ஒழி 
17.
இக்கூற்றுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
''யுவன் ஏன் சோகத்துடன் அமர்துள்ளாய்? இப்படித் துடிபின்றி இருப்பது வாழ்க்கைத் தரத்தை  உயர்த்தாது "  என்று  அத்தை கூறினார்.
இருப்பது வாழ்க்கைத் தரத்தை  உயர்த்தாது
a)
அச்சம் தவிர் 
b)
இளைத்தல் இகழ்ச்சி
c)
ஐம்பொறி ஆட்சிகொள்
d)
கற்றது ஒழுகு
18.
எதிர்காலத்தில் நான் ஒரு அரசியல் வாதியாக வருவேன். இக்கிராமத்தில் வாழும் மக்களுக்கு நிச்சயமாக சேவை செய்வேன்.
மேற்காணும் கூற்று எதை உணர்த்துகிறது.
a)
எண்ணுவது உயர்வு 
b)
காலம் அழியேல் 
c)
இளைத்தல் இகழ்ச்சி
d)
அச்சம் தவிர்