wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL TEST - 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

“என்னை ________________ என்று நினைத்தீர்களா? நானும் ______________

உங்களைப் போல் உயர்வேன்,” என்று சங்கர் உறுதியாகக் கூறினான்.

a)

ஓட்டை வாய் - தலை எடுத்துட்டு

b)

கிள்ளுக்கீரை - தலை எடுத்து

c)

கிணற்றுத் தவளை - தாளம் போட்டு

d)

எடுப்பார் கைப்பிள்ளை - தாளம் போ

2.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


தக்க நேரத்தில் உதவி செய்தல்

a)

தோள் கொடுத்தல்

b)

வாரி இறைத்தல்

c)

கை கூடுதல்

d)

கை கொடுத்தல்

3.

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


__________வென கோபத்துடன் இருந்த சிவா __________________, வென்ற தன் குழந்தையின் மழலைச் சிரிப்பைக் கேட்டதும் மெய் மறந்து நின்றார்.

a)

குடுகுடு - கலகல

b)

கடுகடு - குடுகுடு

c)

கடுகடு - கலகல

4.

பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைத் தெரிவு செய்க

a)

கை கூடுதல் - உதவி செய்தல்

b)

தலை முழுகுதல் - அவமானமடைதல்

c)

செவி சாய்த்தல் - செயலில் ஈடுப்படுதல்

d)

தாளம் போடுதல் - வறுமையில் துன்பப்படுதல்

5.

இரட்டைக்கிளவியைத் தவறாகப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

புலி தன் இரையைக் குகைக்குள் தரதர என இழுத்துச் சென்றது.

b)

தண்டவாளத்தில் அதிவிரைவு ரயில் குடுகுடு என விரைந்து ஓடியது.

c)

நில நடுக்கத்தின்போது அக்கட்டடங்கள் கிடுகிடு என அதிர்ந்தன.

d)

கடுகடு என இருந்த ஆசிரியரின் முகத்தைக் கண்ட மாணவர்கள் அமைதியாக இருந்தனர்.

6.

மிகவும் தீவிரமாக எனும் பொருளை விளக்கும் மரபுத்தொடர் எது ?

a)

முயல் கொம்பு

b)

முழு மூச்சு

c)

மனப்பால் குடித்தல்

d)

வெளுத்து வாங்குதல்

7.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியை விளக்கும் செய்யுள் எது?


மாணிக்கவாசகர்

சிறு வயது முதலே அறிவும் திறனும் மிக்கவர். அவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அவரைத் தம் அமைச்சராக நியமித்தார்.

a)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

செல்வர்கழகு செழுங்கிளை தாங்குதல்

8.

தேர்வில் குறைவான புள்ளிகளைப் பெற்றதால் பாலுவின் அப்பா பற்களை _______ வெனக் கடித்தார்.

a)

தரதர

b)

கடுகடு

c)

நறநற

d)

சிடுசிடு

9.

பேரங்காடியில் திருடிவிட்டுத் தப்பியோட முயன்ற திருடனை அங்கிருந்த

பொது மக்களில் ஒருவர் ____________ என அறைந்தார்.

a)

கடகட

b)

பளார் பளார்

c)

பளீர் பளீர்

d)

படீர் படீர்

10.

கந்தன் பாரமான அந்த மூட்டைகளைத் ___________ வென இழுத்து வந்தான்.

a)

தரதர

b)

நறநற

c)

குளுகுளு

d)

வெடவெட