wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மதிப்பிடு 5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முத்து செதுக்கிய ______________யைக் கண்டு அனைவரும் பாராட்டினர்.

a)

சிளை

b)

சிலை

c)

சீலை

d)

சிழை

2.

சிவா __________ ஏறும் போட்டியில் முதல் நிலை பெற்றான்

a)

மலை

b)

மளை

c)

மழை

3.

சிவா ___________ யில் உடற்பயிற்சி செய்வான்.

a)

காளை

b)

காலை

c)

கலை

4.

குமார் தங்கைக்காக ____________ வாங்கி கொடுத்தான்.

a)

வலையல்

b)

வலையள்

c)

வளையல்

5.

_________ ஓய்வு காரணமாக திரு.முரளி பள்ளியில் இருந்து விடை பெற்றார்.

a)

பனி

b)

பணீ

c)

பணி

6.

வாகனத்தின் ________ சிவாவின் கண்களைக் கூச செய்தது.

a)

ஒளி

b)

ஓலி

c)

ஒழி

7.

திரு வாசு ____________ வீசும் பூக்களை நட்டார்.

a)

மநம்

b)

மனம்

c)

மணம்

8.

மாலை ____________ நான் திடலுக்கு விளையாடச் செல்வேன்.

a)

வேளையில்

b)

வேலையில்

c)

வேழையில்

9.

கோறணி நச்சு காரணமாக மாணவ்ர்கள் -_____________ வாயிலாக பாடம் கற்கின்றனர்.

a)

வளைத்தளம்

b)

வலைத்தலம்

c)

வலைத்தளம்

10.

அந்த சட்டையில் ___________ பட்டிருந்தது.

a)

கரை

b)

கறை

11.

___________ வாங்கிய புத்தகத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும்.

a)

இறவல்

b)

இரவல்

12.

வாணி மல்லிகை மலர்களைப் ____________

a)

பறித்தாள்.

b)

பரித்தாள்

13.

திருடனைக் கண்ட நாய் _______________.

a)

குறைத்தது

b)

குரைத்தது

14.

மாலா தினமும் தன் பறவைகளுக்கு _________ போடுவாள்.

a)

இரை

b)

இறை

15.

அம்மா சமைத்த கோழி ___________ சுவையாக இருந்தது.

a)

கரி

b)

கறி