Font size
Worksheetsவெப்பத்தின் பயன்பாடு
Total questions: 15
Worksheet time: 8mins
இரயில் தண்டவாளத்தில் காணப்படும் இடவெளியைப் படத்தில் காணலாம். ஏன் தண்டவாளங்களுக்கு இடையில் இடவெளி விடப்பட்டுள்ளது?
இரயில் மின்கச் சுலபமாகப் பயணம் செய்ய
வெப்பகாலத்தில் தண்டவாளங்கள் விரிவடைய
குளிர்காலத்தில் தண்டவாளங்கள் சுருங்க
அதிகாலை மணி 1.00க்கு மின்கம்பிகளுக்கு என்ன நிகழும் ?
தளர்ச்சியாகிறது
இறுக்கமாகிறது
மாற்றம் இல்லை
இப்பரிசோதனையின் வாயிலாக நீங்கள் கண்டறிந்தது ?
இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது விரிவடைவதால் வளையத்தினுள் நுழையும்.
இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது விரிவடைவதால் வளையத்தினுள் நுழையாது.
இருப்புப் பந்து வெப்பப்படுத்தும்போது, அது சுருங்குவதால் வளையத்தினுள் நுழையாது.
இரண்டு குவளைகள் ஒன்றோடு மற்றொன்று, படத்தில் காண்பது போல ஒட்டிக்கொண்டன. கீழ்க்காண்பனவற்றுள் எவை இந்த இரண்டு குவளைகளையும் பிரிக்க உதவும் வழிகள்?
B குவளையை வெப்பப்படுத்த வேண்டும்
A குவளையை வெப்பப்படுத்த வேண்டும்
B குவளையினுள் பனிக்கட்டிகள் போட வேண்டும்
படம், ஓர் ஆராய்வுக்கு அடுக்கப்பட்ட கருவிகளைக் காட்டுகிறது. 5 நிமிடங்களுக்குப் பின் என்ன நிகழும்?
நீரின் கொள்ளளவு குறையும்
சுடுநீரின் கொள்ளளவு அதிகரிக்கும்
வண்ண நீர் மட்டம் உயரும்
வண்ண நீர் மட்டம் கீழ் இறங்கும்
படம். குகன் இறுக்கமாக உள்ள ஒரு புட்டியின் மூடியை மெழுகுவர்த்தியின் ஒளியில் சூடாக்கப்படுவதைக் காட்டுகிறது. சூடாக்கப்பட்டதும் குகன் புட்டியின் மூடியை ஏன் எளிதாக திறந்தான்?
உலோகம் நீராக மாறியது
உலோகம் உருகியது
உலோகம் விரிவடைந்த்து
உலோகம் சுருங்கியது
படம், ஓர் ஆராய்வினைக் காட்டுகிறது. புட்டி பனிக்க்ட்டி நிரம்பிய முகவையில் வைக்கப்பட்டது சில நிமிடங்களுக்குப்பின் ஏன் ஊதுப்பந்தில் உள்ள காற்று வெளியேறியது?
ஊதுப்பந்தின் நொயவ வளையம் உருகியதால்
புட்டி சுருங்கியதால்
புட்டியில் உள்ள காற்று சுருங்கியதால்
புட்டியில் உள்ள காற்று வெளியேறியதால்
படம், ஒரு இரயில் தண்டவாளத்தின் இடைவெளியைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது இடைவெளியின் பயன்பாடு?
அதீத வெப்பத்தின் போது விரிவடைந்து தண்டவாளம் வளையாமல் இருக்க
இரயில் தண்டவாளத்தில் விரைவாக பயணம் செய்ய
இரயிலின் பாகத்தில் வழவழப்புத் தன்மையை ஏற்படுத்த
விபத்து ஏற்படும் பொழுது இரயிலை நிறுத்த
படம் காட்டும் ஆராய்வின் முடிவு என்ன?
பொருள் வெப்பப்படுத்தினால் விரிவடையும்
பொருள் வெப்பப்படுத்தினால் சுருங்கும்
பொருள் வெப்பப்படுத்தினால் கீழே தொங்கும்
பொருள் வெப்பப்படுத்தினால் அறுந்து விடும்
சுடுநீரில் ஊற வைக்கப்பட்ட பஞ்சால் கூம்புக்குடுவை Q சுற்றப்பட்டது. 5 நிமிடங்களுக்கு பின் நடுப்பகுதியில் உள்ள வண்ண நீருக்கு என்ன நிகழும்?
ஒன்றும் நிகழாது
கூம்புக்குடுவை P -யை விட்டு தூரமாக நகரும்
கூம்புக்குடுவை Q- விற்கு அருகில் நகரும்
கூம்புக்குடுவை P- இன் அருகில் நகரும்
ஏன் இரும்புப் பந்து வெப்பப்படுத்திய பின் இரும்பு வளையத்தில் நுழையவில்லை?
சிறிய இரும்பு வளையம் என்பதால்
இரும்புப் பந்து பெரியதாக உள்ளது
இரும்புப் பந்து வெப்பமடைந்ததால் விரிவடைந்து விட்டது.
இரும்புப் பந்து குளிர்ச்சியடைந்ததால் சுருங்கி விட்ட்து.
படத்தில் காட்டியுள்ளா போத்தலை சுடு நீரில் வைத்தல் நிகழக்கூடியதை முன் அனுமானி
பலூனின் அளவு பெரிதாகும்
பலூன் விரிவடையும்
சுடு நீர் விரிவடையும்
பலூனின் அளவு சிறிதாகும்
படத்தில், 10 நிமிடங்கள் கழித்து நிகழக்கூடியதன் உற்றறிதல் யாது?
வர்ண நீர் விரிவடையும்.
வர்ண நீர் மட்டம் கீழே இறங்கும்.
வர்ண நீர் மட்டம் மேலே எழும்பும்.
படம் நீர் வெப்பப்படுத்தப் படுவதைக் காட்டுகிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் கிடைத்தால் ___________.
அது இன்னும் வெப்பமாகும்.
அது விரிவடையும்.
அதன் வெப்பநிலை குறையும்.
அதன் வெப்பநிலை அதிகரிக்கும்.
படம் வெப்பத்தை அளக்கும் ஒரு வெப்பமானியைக் காட்டுகிறது.
ஏன் வெப்பமானியில் பாதரசத்திற்குப் பதிலாக நீரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல?
நீர் சீராக விரிவடையாது மற்றும் சுருங்காது.
நீர் குறைவான வெப்பநிலையில் உறைகிறது.
வெப்பநிலை அதிகரிப்பதாலும் குறைவதாலும் நீருக்கு எந்த விளைவும் ஏற்படாது.
