Worksheetsபுதிர்ப்போட்டி - இறுதிச்சுற்று
Total questions: 25
Worksheet time: 19mins
_______________ என்ற சத்தத்தைக் கேட்ட குழந்தை தூக்கம் கலைந்து எழுந்தது.
கல கல
கிலு கிலு
சல சல
மள மள
மேற்கண்ட உரைக்குத் தொடர்பான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
உடையது விளம்பேல்
இயல்வது கரவேல்
ஔவியம் பேசேல்
ஈகைத் திறன்
கூற்றுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
கண்ணினைக் காக்கும் இமை போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
சூரியனைக் கண்ட பனி போல
இலைமறை காய் போல
பொருத்தமான மரபுத்தொடர் யாது?
கரை கண்டவர்
பெயர் பொரித்தல்
வெளுத்து வாங்குதல்
எடுப்பார் கைப்பிள்ளை
கோடிடப்பட்ட சொல்லின் எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
தாழ்வு
ஏழ்மை
உயர்வு
துன்பம்
"ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு"
எனும் பழமொழிக்குத் தொடர்புடைய உலக நீதியைத் தெரிவு செய்க.
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்.
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.
சினந்தேடி யல்லலையுந் சேறல் வேண்டாம்.
பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
சுற்றத்தின் அழகு சூழ இருத்தல்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?
குமரகுருபர சுவாமிகள்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது ____________
இழுக்கு
இலுக்கு
இளுக்கு
இலக்கு
"அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்"
எனும் பொருளை ஏற்றுள்ள புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அச்சம் தவிர்
ஏறுபோல் நட
ஆண்மை தவறேல்
ஓய்தல் ஒழி
உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் எண்ணைத் தெரிவு செய்க.
0
3
7
4
சரியான விடையைத் தெரிவு செய்க.
ப் + ஔ = பௌ
ல் + உ = லூ
ண் + ஈ = ணி
ம் + ஆ = ம
கோடிடப்பட்ட சொல் உணர்த்தும் இலக்கண கூறு யாது?
திணை
பால்
இடம்
காலம்
"ஓடின"
எனும் சொல்லுக்கு ஏற்ற காலத்தைத் தெரிவு செய்க.
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
காலம் - இல்லை
தொழிற்பெயரைத்
தெரிவு செய்க.
ஆசிரியர்
புத்தகம்
மரம்
போதித்தல்
கீழ்க்காண்பனவற்றுள் பிழையானதைத் தெரிவு செய்க.
உயிர் எழுத்து - 12
மெய் எழுத்து - 6
உயிர்மெய் எழுத்து - 216
ஆய்த எழுத்து - 1
விமலன்
எனும் சொல்லில் ஆறாம் வேற்றுமை உருபை இணைத்திடுக.
விமலனிடம்
விமலனுடைய
விமலனால்
விமலனுக்கு
அஃறிணையைக்
காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பூக்கள்
அன்னை
தாதியர்
சிறுவன்
கவிஞர் வைரமுத்து பாடலை ________________
வரைந்தார்
கூறினார்
இயற்றினார்
பேசினார்
புணர்ச்சியைத் தெரிவு செய்க.
இயல்பு புணர்ச்சி
தோன்றல் விகாரப் புணர்ச்சி
திரிதல் விகாரப் புணர்ச்சி
கெடுதல் விகாரப் புணர்ச்சி
போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் தன் தாயார் இறந்து விட்ட காரணத்தால், எதிர்காலத்தில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று செழியன் __________________.
கடுக்காய் கொடுத்தான்
கங்கணம் கட்டினான்
உச்சிக் குளிர்ந்தான்
அள்ளி இறைத்தான்
குடும்பங்களில் காலங்காலமாய்த் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ____________________ பிள்ளைகள் தவறாது கடைபிடித்து வர வேண்டும்.
நன்மை தீமைகளைப்
ஆடல் பாடல்களைப்
பழக்க வழக்கங்களைப்
கல்வி கேள்விகளைப்
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆத்திசூடி அல்ல?
ஓய்தல் ஒழி
ஒப்புர வொழுகு
ஐய மிட்டுண்
ஊக்கமது கைவிடேல்
கனத்த மழையில் சிறுவர்கள் திடலில் காற்பந்து விளையாடினர்.
வாக்கியத்தில் உள்ள எழுவாய் எது?
பந்து
கனத்த மழை
சிறுவர்கள்
விளையாடினர்
படத்திற்கேற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
சினைப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
தொழிற்பெயர்
