wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழி பெயர்ப்பு கல்வி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"உனதருளே பார்ப்பன் அடியேனே "யார் யாரிடம் கூறியது ?

a)

குலசேகர ஆழ்வாரிடம் இறைவன்

b)

இறைவனிடம் குலசேகரர்

c)

மருத்துவரிடம் நோயாளி

d)

நோயாளியிடம் மருத்துவர்

2.

தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க. தலைப்பு:செயற்கை நுண்ணறிவு குறிப்புகள்: கண்காணிப்பு கருவி,அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது,திறன்பேசியிலுள்ள வரை படம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியை காண்பிப்பது.

a)

தலைப்புகளுக்கு தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

b)

தலைப்புகளுக்கு பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

c)

தலைப்புகளுக்கு தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

d)

குறிப்புகளுக்கு பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது

3.

பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனை குறிக்கிறது?

a)

வானத்தையும் பாட்டையும்

b)

வானத்தையும் புகழையும்

c)

வானத்தையும் பூமியையும்

d)

வானத்தையும் பேரொளியையும்

4.

குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்து பாடுகிறார்.பூனையார் பால் சோற்றை கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே.....

a)

மரபு வழுவமைதி; திணை வழுவமைதி

b)

இடவழுவமைதி; மரபு வழுவமைதி

c)

பால் வழுவமைதி ;திணை வழுவமைதி

d)

காலவழுவமைதி; இட வழுவமைதி

5.

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

a)

துலா

b)

சீலா

c)

குலா

d)

இலா

6.

'மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பு உணர்த்தும் செய்தி யாது ?

a)

சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

b)

காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

c)

பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

d)

சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

7.

அருந்துணை என்பதைப் பிரித்தால்

a)

அருமை+ துணை

b)

அரு +துணை

c)

அருமை+ இணை

d)

அரு +இனை

8.

"இங்கு நகரப்பேருந்து நிற்குமா?" என்று வழிபோக்கர் கேட்பது............. வினா."அதோ அங்கே நிற்கும்" என்று மற்றொருவர் கூறியது...............விடை .

a)

ஐய வினா வினா ;எதிர் வினாதல்

b)

அறிவினா ;இனமொழி விடை

c)

அறியா வினா ;சுட்டு விடை

d)

கொளல் வினா;இனமொழி விடை

9.

"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும்தெருளை"இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

a)

தமிழ்

b)

அறிவியல்

c)

கல்வி

d)

இலக்கியம்

10.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் .................. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ....................

a)

அமைச்சர், மன்னன்

b)

அமைச்சர் ,இறைவன்

c)

இறைவன், மன்னன்

d)

மன்னன் ,இறைவன்

11.

குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள் ...

a)

முல்லை குறிஞ்சி மருத நிலங்கள்

b)

குறிஞ்சி பாலை நெய்தல் நிலம்

c)

குறிஞ்சி மருதம் நெய்தல் நிலங்கள்

d)

மருதம் நெய்தல் பாலை நிலங்கள்

12.

ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டுவினை தொடர் எது ?

a)

ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுவார் .

b)

ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது .

c)

ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது .

d)

ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆட படுகின்றனர்.

13.

மலர்கள் தரையில் நழுவும் .எப்போது?

a)

அள்ளி முகர்ந்தால்

b)

தளரப் பிணைத்தாள்

c)

இறுக்கி முடித்துவிட்டால்

d)

காம்பு முறிந்தால்

14.

கரகாட்டத்தை" கும்பாட்டம் "என்றும்" குடக்கூத்து "என்றும் கூறுவர்.இதற்கான வினா எது?

a)

கரகாட்டம் என்றால் என்ன?

b)

கரகாட்டம் எக் காலங்களில் ஆடப்படுகிறது?

c)

கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் யாவை?

d)

கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

15.

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a)

நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

b)

ஊரில் விளைச்சல் இல்லாததால்

c)

அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d)

அங்கு வறுமை இல்லாததால்