wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருவாசகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருவாசகத்தை அருளியவர் யார்?

a)

திருநாவுக்கரசர்

b)

மாணிக்கவாசகர்

c)

வள்ளலார்

d)

குமரகுருபர சுவாமிகள்

2.

வானாகி என்பதன் பொருள் என்ன?

a)

காற்றாகவும்

b)

வெளிச்சமாகவும்

c)

மண்ணாகவும்

d)

ஆகாயமாகவும்

3.

வானாகி மண்ணாகி வளியாகி __________________

விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஒலியாகி

b)

ஒளியாகி

c)

ஒழியாகி

4.

இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன?

a)

திருமுறை

b)

திருவருட்பா

c)

திருமந்திரம்

d)

திருவாசகம்

5.

ஊனாகி உயிராகி ______________________ இன்மையுமாய்க்

விடுப்பட்ட இடத்தைப் பூர்த்தி செய்க.

a)

பொய்யுமாய்

b)

உன்மையுமாய்

c)

உண்மையுமாய்

6.

உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். தன்னை உணர்ந்தவர்களுக்கும் உள்ளவனாகவும் நம்பாதவர்களுக்கும் இல்லாதவனாகவும் விளங்குகின்றான்.

இப்பொருளுக்கு ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க

a)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

b)

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

c)

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

d)

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

7.

திருவாசகத்தைச் சரியாக நிரல்படுத்துக.

a)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

b)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

8.

நான், எனது என்ற செருக்குடையவரை அவரவர் விருப்பம்போல் ஆடவிட்டு, கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?

a)

ஆணவமிக்கவர்

b)

ஆத்மாமிக்கவர்

c)

ஆனந்தமிக்கவர்

d)

ஆபத்துமிக்கவர்

9.

கோனாகி என்பதன் பொருள் என்ன?

a)

ஒளியாகி

b)

நிலமாகி

c)

அரசனாகி

d)

காற்றாகி

10.

திருவாசகப் பாடலுக்குத் தொடர்பில்லாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இறைவன் ஆகாயமாகவும் நிலமாகவும் இருக்கின்றார்.

b)

இறைவன் உடலில் உறையும் ஆன்மாவாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்.

c)

இறைவன் காற்றாகவும் வெளிச்சமாகவும் தென்படுவதில்லை

d)

இறைவனின் தன்மையைப் போற்றிப் புகழ்வதற்குச் சொற்களே கிடையாது