wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

'உடைய' என்ற உருபைக் கொண்டது .............. ஆகும்.

a)

முதல் வேற்றுமை

b)

ஆறாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

d)

ஐந்தாம் வேற்றுமை

2.

கோடிடப்பட்ட சொல்லுக்கு ஏற்ற வேற்றுமை உருபைத் தெரிவு செய்க. நாட்டியம் சிறந்து விளங்க சுமதி கடுமையாகப் பயிற்சி செய்தாள்.

a)

கு

b)

இல்

c)

d)

அது

3.

பின்வருவனவற்றுள் எதற்கு உருபு இல்லை.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

முதல் வேற்றுமை

d)

ஐந்தாம் வேற்றுமை

4.

கண்ணன் தம்பியோடு புத்தகக் கடைக்குச் சென்று பல புத்தகங்களை வாங்கி வந்தான்.


3-ஆம் வேற்றுமையைத் தெரிவு செய்க.

a)

கடைக்குச்

b)

தம்பியோடு

c)

புத்தகங்களை

d)

வாங்கி

5.

வேற்றுமை .............. வகைப்படும்.

a)

7

b)

8

c)

6

d)

9

6.

மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

மாணவியை

b)

கைத்தொலைபேசியுடன்

c)

சேற்றில்

d)

நண்பனுடைய

7.

பின்வருவனவற்றுள் எது முதலாம் வேற்றுமை பற்றிய தவறான கூற்றாகும்?

a)

உருபு கிடையாது.

b)

எழுவாய் வேற்றுமை என்பார்கள்.

c)

பெயர்ச்சொற்கள், தொகைகள் முதலியவை எழுவாயாக அமையும்.

d)

எழுவாய் தொடருக்குப் பின் வலிமிகும்.

8.

சரியான வேற்றுமை உருபு ஏற்று வராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர் தமிழரசைப் பாராட்டினார்.

b)

இந்தியாவின் தலைநகரம் புதுடில்லி.

c)

கந்தனிடம் இரண்டு உணவுப் பொட்டலங்கள் உள்ளன.

d)

சுப்ரமணியைப் பதவி உயர்வு கிடைத்தது.

9.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தேவி வீணை மீட்டினாள்.

b)

மல்லிகா மலர்களைக் கொய்தாள்.

c)

நவின் தமிழ்பால் பற்றுக் கொண்டாள்.

d)

நிவேதா அம்மாவோடு கோயிலுக்குச் சென்றாள்.

10.

ஐந்தாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.


மலையடிவாரத்தில் தழைகளை மேய்ந்து கொண்டிருந்த மானைக் கண்டதும் புலி அதன்பால் வேகமாகப் பாய்ந்தது.

a)

புலி

b)

அதன்பால்

c)

மானைக்

d)

மலையடிவாரத்தில்

11.

சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


ஏழாம் வேற்றுமை

a)

அது, உடைய, இருந்து

b)

இன், இருந்து, இல், நின்று

c)

இடம், பால், கண்

12.

சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


ஆறாம், வேற்றுமை

a)

அது, உடைய, இருந்து

b)

இன், இருந்து, இல், நின்று

c)

ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்