NEW
Font size
Worksheetsதமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்
Total questions: 20
Worksheet time: 10mins
1. ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் எனும் உலகநீதியின் பொருள் என்ன?
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
___________________ செய்வாரோ டிணங்க வேண்டாம்.
மாதாவை
வஞ்சனைகள்
ஒருவரையும்
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது எனும் கூற்றுக்குப் பொருத்தமான உலகநீதி எது?
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
_________________ இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் ________________ .
முயற்சி, விடும்
உடுக்கை, நட்பு
இனிய, தற்று
பின்வருபவனவற்றுள், எது முயற்சியைக் குறிக்கும் திருக்குறள் ஆகும்?
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே,
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை,
இனிய உளவாக இன்னாத கூறல்
முயற்சி திருவினை யாக்கும் ___________________
இன்மை _________________ விடும்.
சேர்ந்தார்க்கு, இடும்பை
முயற்றின்மை, புகுத்தி
வாலறிவன், தொழஅர்
உடுத்திய ஆடை நழுவும்போது அவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும் எனும் கூற்றுக்குப் பொருத்தமான திருக்குறாள் எது?
கற்க கசடறக் கற்பவை கற்றபின்,
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது,
மேற்கண்ட படத்திற்குப் பொருத்தமான இணைமொழி எது?
மேடு பள்ளம்
ஆடை அணிகலன்
தாயும் சேயும்
உடையும் ஆபரணமும் எனும் பொருளைக் கொண்டிருக்கும் இணைமொழி யாது?
அல்லும் பகலும்
நன்மை தீமை
ஆடை அணிகலன்
______________ பிள்ளை ________________ குடிக்கும்
இளமைக், சிலையில்
அன்பான, ஆபத்தில்
அழுத, பால்
மேற்கண்ட படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது?
சிக்கனம் சீரளிக்கும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும் எனும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி எது?
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஊருடன் கூடி வாழ்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
_________________ யொருநாளு _________________ வேண்டாம்.
வஞ்சனைகள், டிணங்க
மாதாவை, மறக்க
ஒருவரையும், சொல்ல
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது எனும் கூற்றுக்குப் பொருத்தமான உலகநீதி எது?
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு,
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை,
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
___________________ நம்பினோர் கைவிடப்படார்.
ஐந்தில்
ஊருடன்
கடவுளை
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல் எனும் பொருளைக் கொண்டிருக்கும் உவமைத்தொடர் யாது?
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
எலியும் பூணையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.
வருமானமும் செலவினமும்
கல்வி அறிவு
அகிலன் சினத்தால் தன் நண்பனைக் கடுஞ்சொற்களால் திட்டினான். மேற்கண்ட கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி எது?
ஊருடன் கூடி வாழ்
சிக்கனம் சீரளிக்கும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
