Font size
Worksheetsதமிழ்மொழி படிநிலை ஒன்றுக்கான புதிர்ப்போட்டி
Total questions: 21
Worksheet time: 11mins
1. உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?
18
16
12
1. க், ச், ட், த், ப், ற்- ஆகிய எழுத்துக்கள் எந்த வகையைச் சேர்ந்தது?
வல்லினம் எழுத்துக்கள்
மெல்லினம் எழுத்துக்கள்
இடையினம் எழுத்துக்கள்
1. திருக்குறளை எழுதியவர் யார்?
ஒளவையார்
திருவள்ளுவர்
மகாகவி பாரதியார்
மெய்யெழுத்தில் மொத்தம் எத்தனை வகைப்படும்?
1
2
3
இவற்றுள் எது இடையின மெய்யெழுத்துக்கள் ஆகும்?
ங், ஞ், ண், ந், ம், ன்
ய், ர், ல், வ், ழ், ள்
க், ச், ட், த், ப், ற்
படத்திற்குப் பொருத்தமான ஆத்திச்சூடியைத் தேர்ந்தெடுக.
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஒற்றைக் காலில் நிற்றல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
விடாப்பிடியாக நிற்றல்
அவசரமும் பதற்றமும்
ஒரு செயலை அவசரப்பட்டு செய்து முடிப்பவர்
குறளின் முதல் அடியை நிறைவு செய்க.
_____________________________________
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
இனிய உளவாக இன்னாத கூறல்
"யோ" என்னும் எழுத்து _______ என்பது ஆகும்.
ய் + ஒ
ய் + ஓ
ய் + உ
கீழே உள்ள எழுத்துகளில் எது உயிர்க்குறில் அல்ல?
அ
ஒ
ஐ
கீழ்காண்பனவற்றுள் எது மரபுத்தொடர் அல்ல?
கண்ணும் கருத்தும்
ஓட்டை வாய்
ஒற்றைக் காலில் நிற்றல்
நன்மை தீமை
ஓட்டை வாய் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
உளரிக் கொட்டிவிடும் நபர்
முழு முயற்சியுடன்
அதிகம் தெளிவாகுதல்
இவற்றுள் எது சரியான உயிர்நெடில் எழுத்துக்கள் ஆகும்?
ஆ, ஈ, உ, ஏ, ஓ
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ
ஆ, இ, ஊ, ஏ, ஓ
இப்படத்தைக் குறிக்கும் சரியான கொன்றை வேந்தன் என்ன?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஓடியும் தேடு திரவியம் திரை கடல்.
சரியான நிரலில் உள்ள கொன்றை வேந்தன் எது?
கடல் ஓடியும் திரை தேடு திரவியம்
திரை ஓடியும் கடல் தேடு திரவியம்
திரவியம் தேடு கடல் ஓடியும் திரை
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
இப்பொருளை உணர்த்தும் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
எழுத்துகள் எல்லாம் அ எனும் எழுத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதேபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இப்படத்திற்குச் சரியான செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சீதா பழங்களைப் பறிக்கின்றாள்!
சீதா பூக்களைப் பறிக்கின்றாள்.
சீதா பூக்களைப் பறிக்கின்றாள்?
செய்தி வாக்கியத்தியத்தைப் பற்றிய சரியான கூற்று எது?
செய்தி வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இருக்கும்.
வாக்கியத்தில் ஒரு கருத்தை தெரிவிக்கப்படும்
வாக்கியத்தில் வினாச்சொல் இருக்கும்.
திணை எத்தனை வகைப்படும்?
2
3
4
இவற்றுள் எது அஃறிணை ஆகும்?
ஆசிரியர்
நாய்
அப்துல் கலாம்
இறைவன்
அக்கட்டடம் சில நொடிகளுள் _______வென இடிந்து விழுந்தது.
சரியான இரட்டைக்கிளவி என்ன?
மள மள
தட தட
சர சர
மட மட
