Font size
Worksheetsஉணவு பதனீடு
Total questions: 20
Worksheet time: 10mins
உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?
நீண்ட நாட்கள் உணவைக் கெடாமல் பாதுகாத்தல்
உணவின் சுவையை மாற்றுதல்
உணவை குளிர்பதனப் பெட்டியில் வைத்தல்
உணவை உலர வைத்தல்
உணவு கெட மூலக் காரணமாக அமையும் நுண்ணுயிர்கள் யாவை?
குச்சியம், நச்சியம்
குச்சியம், பூஞ்சணம்
பூஞ்சணம் மட்டும்
புரோட்டோசோவா
கீழ்க்காண்பனவற்றுள் எவை ( 3 விடைகள்) பால் கெட்டுவிட்டதை உணர்த்துகிறது?
திரிந்து விடுதல்
புளிப்புத் தன்மை
நுரைத்து காணப்படுதல்
மணமாக இருத்தல்
ஏன் படத்தில் காணும் உணவுப் பொருள் கெடுவதில்லை?
உணவில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டுவிட்டது.
உணவில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டுவிட்டது.
உணவு புட்டியில் இருந்ததால்
உணவு குளிர்பதனப் பெட்டியில் இருந்ததால்
படம் வாழைப்பழத்தைப் பதனிடும் முறையைக் காட்டுகிறது. இதுபோல பதனிடும் முறையை வேறு எந்த பொருளுக்குப் பயன்படுத்தலாம்?
மீன்
அன்னாசிப்பழம்
குமட்டிப்பழம்
சோறு
படத்தில் காணும் உணவுப்பொருள் கெட்டுவிட்டதை எவ்வாறு உணரலாம்?
துர்நாற்றம் வீசும்
கரும்புள்ளிகள் தோன்றும்
திரிந்து காணப்படும்
புளிக்கும்
உணவைப் பதனிடுவதால் என்ன நன்மை? (3 விடைகள்)
உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
உணவு விரயத்தைத் தடுக்கலாம்.
ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்தலாம்.
உணவின் சுவையைப் பாதுகாக்கலாம்
நுண்ணுயிர்கள் வாழ ஏதுவான சூழல்கள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்ட பதில்)
மிதமான வெப்பநிலை
காற்று
நீர்
ஏதுவான இரசாயனத்தன்மை
போதுமான சத்துகள்
கீழ்காண்பவற்றுள் எது உணவு பதனிடும் முறையல்ல?
காற்று நீக்கி பொட்டலமிடுதல்
பொறித்தல்
ஊறவைத்தல்
புகையிடுதல்
படத்தில் காண்பனவற்றுள் எந்த உணவு விரைவாக கெடும் தன்மையை கொண்டது?
காய்கறிகளையும் பழங்களையும் பதனீடு செய்வதற்கு எது சிறந்த முறையாகும்?
பாஸ்டர் முறை
கலனிடுதல்
ஊறவைத்தல்
மெழுகிடுதல்
உணவுகளை ஏன் பதனீடு செய்ய வேண்டும்? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்)
உணவுக் கெட்டுப் போகாமல் இருக்க
உணவு சுவையாக இருக்க
உணவு நீண்ட நாள் தாங்க
உணவு பார்க்க அழகாக இருக்க
கெட்டுப் போன உணவின் சுவையில் என்ன மாற்றம் நிகழும்?
இனிப்புத் தன்மை கொண்டிருக்கும்
கசப்புத் தன்மை கொண்டிருக்கும்
புளிப்புத் தன்மை கொண்டிருக்கும்
கரிப்புத் தன்மை கொண்டிருக்கும்
கெட்டுப் போன சேற்றின் இழையமைப்பில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும்?
திரிந்து போயிருக்கும்
கருமை நிறமாக இருக்கும்
வாடியிருக்கும்
வழவழப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்
உணவில் பூஞ்சணம் பூத்திருப்பதை எப்படி அறியலாம்?
வெள்ளையாக இருக்கும்
கரும்புள்ளிகள் தோன்றியிருக்கும்
வழவழப்பாக இருக்கும்
மஞ்சள் நிறத்தில் இருக்கும்
நமக்கு உணவு எங்கிருந்து கிடைக்கிறது? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்)
மண்
தாவரங்கள்
கடல்
விலங்குகள்
உணவுகள் கெட்டுப் போவதற்கான காரணிகள் யாவை? (ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
பூஞ்சணம்
நொதிமம்
நச்சியம்
குச்சியம்
வாக்கியத்தில் காலி இடத்தை நிரப்புக.
பூஞ்சணமும் குச்சியமும் உணவிலிருந்து ____________________ பெறுகின்றன.
காற்றைப்
தாதுச் சத்துகளைப்
உணவைப்
உயிர்ச் சத்துகளைப்
காலி இடத்தை நிரப்புக.
குச்சியமும் பூஞ்சைக் காளானும் உணவுப் பொருள்களை ___________________ செய்கின்றன.
சுவைக்க
அழுகச்
மட்கச்
புளிக்கச்
குச்சியமும் பூஞ்சைக் காளானும் உணவைக் கெடச் செய்யும் செயற்பாங்கு நடைபெற தேவைப்படும் கூறுகளைத் தேர்ந்தெடு. (ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
நீர்
காற்று
வசிப்பிடம்
தாதுச் சத்து
