wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SAINS T6 அறிவியல் ஆ6 உணவு பதனிடுதல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?

a)

நீண்ட நாட்கள் உணவைக் கெடாமல் பாதுகாத்தல்

b)

உணவின் சுவையை மாற்றுதல்

c)

உணவை குளிர்பதனப் பெட்டியில் வைத்தல்

d)

உணவை உலர வைத்தல்

2.

படம் வாழைப்பழத்தைப் பதனிடும் முறையைக் காட்டுகிறது. இதுபோல பதனிடும் முறையை வேறு எந்த பொருளுக்குப் பயன்படுத்தலாம்?

a)

மீன்

b)

அன்னாசிப்பழம்

c)

குமட்டிப்பழம்

d)

சோறு

3.

அம்மா தான் வாங்கிய கோழி இறைச்சியைக் குளிர்ந்துறையும் இடத்தில் குளிர்பதனப்பெட்டியில் வைத்தார். ஒரு வாரம் கழித்து கோழி இறைச்சி கெடாமல் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமாகும்?

a)

அதிகக் குளிரில் நுண்ணுயிர்கள் செயலிழந்துவிடும்.

b)

அதிகக் குளிரில் நுண்ணுயிர்கள் இறந்துவிடும்.

c)

குளிர்பதனப் பெட்டியில் உணவைக் கெடாமல் பாதுகாக்க இரசாயனம் உள்ளது.

d)

கோழி இறைச்சியின் இரசாயனத்தன்மை மாறி உள்ளது.

4.

உணவைப் பதனிடுவதால் என்ன நன்மை?

a)

உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

b)

உணவு விரயத்தைத் தடுக்கலாம்.

c)

ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்தலாம்.

d)

உணவின் சுவையைப் பாதுகாக்கலாம்

5.

படத்தில் காணும் உணவுப்பொருள் ஏன் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கிறது?

a)

உணவில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டதால்

b)

உணவில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டதால்

c)

உணவின் காடித்தன்மை அதிகரிக்கப்பட்டதால்

d)

உணவின் வெப்பநிலை அதிகமாக உள்ளதால்

6.

இவற்றுள் எது காற்று நீக்கிப் பொட்டலமிட ஏற்றது?

a)

பொறித்த கோழி இறைச்சி

b)

எண்ணெய்

c)

தானியங்கள்

d)

பால்

7.

கொதிக்க வைத்து சமைத்த உணவில் அழியும் நுண்ணுயிர் எது?

a)

குச்சியம்

b)

அல்கா

c)

பூஞ்சணம்

d)

புரோட்டோசோவா

8.

குளிரச் செய்ய மிக பொருத்தமான உணவு எது?

a)

தேங்காய்

b)

மஞ்சள் தூள்

c)

தேன்

d)

பழங்கள்

9.

இவற்றின் பதனிடும் முறை என்ன?

a)

கொதிக்க வைத்தல்

b)

குளிரச் செய்தல்

c)

உலர்த்துதல்

d)

காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்

10.

வெயிலில் உணவை உலர்த்துவதால், உணவின் சுவை...

a)

மாறுபடும்

b)

அப்படியே இருக்கும்

c)

அதிகரிக்கும்

d)

புளிக்கும்

11.

பழங்களை ஊற வைக்க எதை பயன்படுத்தலாம்?

a)

புளிக்காடி

b)

சுடுநீர்

c)

உப்பு கரைசல்

d)

எண்ணெய்

12.

* மிக பழமை வாய்ந்த பதனிடும் முறை.

* உணவுப் பொருளிலுள்ள ஈரத்தன்மையை

அகற்றிவிடும்


இது எந்த உணவு பதனிடும் முறைக் குறிக்கிறது?

a)

உப்பேற்றம்

b)

குளிரச் செய்தல்

c)

காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்

d)

புகையிடுதல்

13.

* உணவை வெப்பப்படுத்தி அதனைக் காற்று

புகாத கலன்களில் அடைத்தல்.

* நுண்ணுயிர்களைக் கொல்வதற்கு உணவு

கொதிக்க வைக்கப்படுதல்.

* நுண்ணுயிர்கள் மீண்டும் உணவில் புகாதவாறு கலன்கள் இறுக மூடப்படுதல்.


மேற்காணும் தகவல்கள் எந்த உணவு பதனிடும் முறையைக் குறிக்கின்றன?

a)

உலர வைத்தல்

b)

குளிர்ந்துறையச் செய்தல்

c)

புட்டியில் இடுதல், கலனிடுதல்

d)

ஊற வைத்தல்

14.

தாவரம் மற்றும் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் ஒரு வித மெழுகுத் திரவத்தில் நனைக்கப்படுவதன் மூலம் உணவுப் பொருள்களில் பூஞ்சணத்தின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தவும் ஈரத்தன்மையை நிலை நாட்டவும் முடியும்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உணவு எது?

a)
b)
c)
d)
15.

படம் பாஸ்டர் செய்யப்பட்ட பாலைக் காட்டுகிறது.


கீழ்க்காண்பனவற்றுள் எது பாலை பாஸ்டர் செய்யும் செயற்பாங்கின் சரியான நிரலாகும்?

a)

புட்டியலிடுதல் - கொதிக்க வைத்தல்

b)

வெப்பப்படுத்துதல் - புட்டியலிடுதல்

c)

வெப்பப்படுத்துதல் - குளிர்ப்படுத்துதல்

d)

குளிர்ப்படுத்துதல் - வெப்பப்படுத்துதல்