NEW
Font size
WorksheetsZEPHANIAH & JEREMIAH
Total questions: 25
Worksheet time: 20mins
ஆசாரிய குடும்பத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி யார் ?
எரேமியா
செப்பனியா
ஏசாயா
எருசலேம் கீழ்க்கண்ட எந்த மிருகத்திற்கு மாத்திரம் ஒப்பிடப்படவில்லை ?
பெண் ஒட்டகம்
காட்டுக்கழுதை
சிங்கம்
கீழ்க்கண்ட நபர்களில் யார் செப்பனியாவின் வம்ச வரலாற்றில் இடம் பெறவில்லை ?
ஆமரியா
ஆமோன்
கெதலியா
கூஷ்
கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிற மனுஷர்களுக்கு கீழ்க்கண்ட என்னென்ன நேரிடும் ?
ஆஸ்திகள் கொள்ளையாகும்
வீடுகள் பாழாய்ப்போகும்
திராட்சை தோட்டத்தின் பழரசத்தை குடிப்பதில்லை.
அனைத்தும்
கீழ்க்கண்ட இவையிரண்டும் என்ன ?
ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விடுதல்
தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக் கொள்ளுதல்
ஜனங்கள் செய்த இரண்டு நன்மைகள்
ஜனங்கள் செய்த இரண்டு தீமைகள்
யார் கூறியது?
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா
கர்த்தர்
இஸ்ரவேல்
யூதா
முழு இருதயத்தோடு திரும்பாமல் கள்ளத்தனமாக மனந்திரும்பியது யார் ?
இஸ்ரவேல்
யூதா
நிரப்புக.
--------------- செய்ய அவர்கள் அறிவாளிகள், --------------- செய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
நன்மை ; பொல்லாப்பு
பொல்லாப்பு ; நன்மை
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ ? சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ ? என்று எதன் வீதிகளில் போய் தேடுங்கள் என்கிறார்?கண்டடைந்தால் எதை அந்த தேசத்திற்கு தருவதாக கூறுகிறார்?
எருசலேம் ; மன்னிப்பு
சமாரியா ; விடுதலை
வசனத்தை கண்டுபிடிக்கவும்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3 : 5
செப்பனியா 3 : 10
செப்பனியா 3 : 15
விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், நாம் என்ன செய்ய வேண்டும்?
மனங்கசந்து அதன் வேண்டும்.
நம்மை உய்த்து ஆராயவேண்டும்.
நீதி மற்றும் மனத்தாழ்மையை தேட வேண்டும்.
நிரப்புக:
மோவாப் ---------------- போலும், அம்மோன் புத்திரரின் தேசம் ---------------- போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்.
யூதா ; சமாரியா
சோதோம் ; யூதா
சோதோம் ; கொமோரா
கீழ்க்கண்ட எந்த பாடல் இந்த வேதவசனத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது ?
நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன
எதை இழந்தாலும் அதை இழக்காதே
வானம் வெண்கலமாய் ஆவதேன் ?
யார் கிறிஸ்தவன் ? யார் கிறஸ்தவன் ?
வசனத்தை கண்டுபிடிக்கவும்.
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
எரேமியா 2 : 1
எரேமியா 2 : 10
எரேமியா 2 : 11
கீழ்க்கண்ட இணை சரியா? தவறா ?
எகிப்து - சீதோன்
அசீரியா - ஐப்பிராத்து
சரி
தவறு
இஸ்ரவேலும் , யூதாவும் நடந்து கொண்ட சோரமார்க்கம் மற்றும் வேசித்தனம் என்னென்ன ?
விக்கிரக ஆராதனை
மலை , மரம் , கல்லை வணங்கினர்
கர்த்தரை விட்டு விலகினார்கள்
அனைத்தும்
யூதா தேசமே மனந்திரும்பி , தேவனை தேடுங்கள்; சங்கரிக்கிறவன் புறப்பட போகிறான் என்று எரேமியா எந்த அதிகாரத்தில் கதறுகிறார் ?
எரேமியா 4
எரேமியா 5
எரேமியா 6
வசனத்தை கண்டுபிடிக்கவும்.
அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
எரேமியா 6:10
எரேமியா 6:15
எரேமியா 6:20
தள்ளுபடியான வெள்ளி யார்?
இஸ்ரவேல்
யூதா
யாருக்காக இவர்கள் செய்கிறார்கள்?
பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
கர்த்தர்
வானராக்கினி
பாகால்
யார் யாரிடம் கூறியது ?
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான்
கர்த்தர் எரேமியாவிடம்
எரேமியா யோசியா ராஜாவிடம்
எங்கே பிணங்களை அடக்கம் பண்ண இடமில்லாமல் போகும் ?
இன்னோம் பள்ளத்தாக்கு
சங்கார பள்ளத்தாக்கு
தோப்பேத்
அனைத்தும்
வசனத்தை கண்டுபிடிக்கவும்.
பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
செப்பனியா 3:10
செப்பனியா 3:20
செப்பனியா 3:25
வசனத்தை கண்டுபிடிக்கவும்.
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
எரேமியா 6:1
எரேமியா 6:16
எரேமியா 6:19
கீழ்க்கண்ட நபர்களில் யார் யூதாவின் கடைசி நீதியான அரசன் யோசியாவின் நாட்களில் ஊழியம் செய்யாத தீர்க்கதரிசி யார் ?
எரேமியா
ஆமோஸ்
செப்பனியா
