wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

a)

துரைராசு

b)

ராஜகோபாலன்

c)

துரை மாணிக்கம்

d)

ராஜேந்திரன்

2.

இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்

a)

படிக்காசு புலவர்

b)

பொய்யாமொழிப் புலவர்

c)

திரு வி கல்யாண சுந்தரம்

d)

இவர்களில் எவரும் இல்லை

3.

காட்டிலா என்னும் நூல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு

a)

1552

b)

1553

c)

1554

d)

1555

4.

கடல் கடந்து முதலில் அச்சேறிய மொழி தமிழ் என்று குறிப்பிடும் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

a)

இரண்டாம்

b)

மூன்றாம்

c)

ஐந்தாம்

d)

ஆறாம்

5.

சந்தக்கவிமணி என்ற சிறப்பு பெயரால் அறியப்படுபவர்

a)

இளவழகனார்

b)

அருணகிரிநாதர்

c)

அண்ணாமலையார்

d)

தமிழழகனார்

6.

கீழ்க்காண்பவற்றுள் பாவாணருடன் தொடர்பு இல்லாதது எது

1. உலகத் தமிழ்க்கழகத்தின் நிறுவித் தலைவராக இருந்தவர்

2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர்

3. திருவள்ளுவர் தவச்சாலையை அல்லூரில் உருவாக்கியவர்

4. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

a)

ஒன்று மட்டும் சரி

b)

ஒன்று மற்றும் இரண்டும் சரி

c)

மூன்று மட்டும் சரி

d)

மூன்று மற்றும் நான்கும் சரி

7.

"உவமையும் பொருளும் வேற்றுமையை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என்ற வரிகள் இடம்பெறும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

யாப்பருங்கலக் காரிகை

d)

தண்டியலங்காரம்

8.

மா. ராமலிங்கம் எந்த நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்

a)

உரைநடையின் அணிகலன்

b)

வாடிவாசல்

c)

புதிய உரைநடை

d)

தமிழ் இன்பம்

9.

"வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்

மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"இவ்வரிகள் இடம் பெற்ற சிலப்பதிகார காதை

a)

காடுகாண் காதை

b)

நாடுகாண் காதை

c)

கடலாடு காதை

d)

இந்திர விழா ஊரெடுத்த காதை

10.

நல்ல எனும் அடைமொழியுடன் சிறப்பிக்கப்படும் நூல்

a)

ஐங்குறுநூறு

b)

நற்றிணை

c)

அகநானூறு

d)

குறுந்தொகை