wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி - இடைநிலைப்பள்ளி (KSSM படி 1-5)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணிவிடக்கூடாது.

இந்த விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி என்ன?

a)

அகல உழுவதிலும் ஆழ உழுவது மேல்

b)

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

2.

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை

இப்பழமொழியின் சரியான விளக்கம் என்ன?

a)

காட்டில் திசை தெரியாமல் மாட்டிக் கொள்பவருக்குத் தெய்வம் உதவும்.

b)

துன்பத்திலிருந்து மீள வழி தெரியாதவருக்கு ஆண்டவன்தான் துணை.

c)

திக்கு தெரியாமல் தவிப்பவருக்கு இறைவன் நல்ல வழியைக் காட்டுவார்.

d)

எட்டுத்திக்கும் நிறைந்திருக்கும் இறைவனை நாம் எப்போதும் துணையாகக் கொள்ள வேண்டும்.

3.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.

குந்தித் தின்றால் ______________

a)

குலமும் அழியும்

b)

குளமும் வற்றும்

c)

குன்றும் மாளும்

d)

பணமும் கரையும்

4.

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

இப்பழமொழியில் நாம் முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டியவை எவை எனக்

குறிப்பிடப்பட்டுள்ளது?

a)

பணம், பதவி, புகழ்

b)

அறிவு, உறவு, செல்வம்

c)

அறிவு, அனுபவம், ஆள்பலம்

d)

செல்வம், அறிவு, அனுபவம்

5.

தேன்மொழி கணிதப் பாடத்தில் மிகவும் பின்தங்கி இருந்தாள். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வந்ததால் இன்று அப்பாடத்தில் புலமை பெற்றுத் திகழ்கிறாள்.

இச்சூழலுக்கு ஏற்ற பழமொழி என்ன?

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

d)

தன் கையே தனக்கு உதவி

6.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

இவ்விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி?

a)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

b)

தர்மம் தலை காக்கும்

c)

அடாது செய்பவன் படாது படுவான்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

7.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்


இஃது ஒளவையாரின் மூதுரை. இம்மூதுரைக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

b)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

கெடுவான் கேடு நினைப்பான்

8.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.

______ அறியாதவன் _______அறியான்

a)

சைகை, சற்றும்

b)

சற்றும், சைகை

c)

கையை, எதையும்

d)

கையை, காலை

9.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு


இப்பழமொழியின் விளக்கம் என்ன?

a)

கடலில் திரவியத்தைத் தேட வேண்டும்.

b)

கடலில் ஓடுவதற்குத் திரவியம் வேண்டும்.

c)

கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்

d)

வெளியூருக்குச் சென்றாவது புகழ் ஈட்ட வேண்டும்.

10.

கலைமாறன் உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் பந்து விளையாடுவதில் சிறந்த ஆட்டக்காரனாகத் திகழ்கிறான்.

a)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

b)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

c)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.

d)

கற்றது கம்மண் அளவு கல்லாதது உலகளவு