NEW
Font size
Worksheetsதமிழ்மொழி படிவம் 1(வினா எழுத்து))
Total questions: 17
Worksheet time: 9mins
கீழ்க்காணும் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை வினாச்சொல்?
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா
புறவினா
‘அறமா’ இச்சொல் எவ்வகை வினாச்சொல்?
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா
புறவினா
பிழையான கூற்றைத் தெரிவு செய்க.
வினா எழுத்துகள் ஒரு சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வரும்
புறவினா சொல்லின் உள்ளிருந்து வினாப் பொருளைத் தரும்
வினா எழுத்துகளை இருவகையாகப் பிரிக்கலாம்
ஆ, ஓ எனும் வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்
கீழ்க்காணும் கோடிடப்படுள்ள சொற்களுள் எஃது அகவினா ஆகும்?
சுனாமி பேரலை ஏற்படக் காரணம் என்ன?
அவனா அப்படிச் செய்தான்?
கண்ணகியின் கணவன் கள்வனா?
புறவினாச் சொற்களைத் தெரிவு செய்க.
யார், ஏன்
எப்படி, எது
யாது, அவளா
எப்பையன், சரிதானே
பின்வரும் வாக்கியங்களுள் அகவினாச் சொல்லைக் கொண்ட வாக்கியத்தைத்
தெரிவு செய்க.
“கோவலனா கள்வன்?” என்று கேள்வி எழுப்பினாள் கண்ணகி.
“அவனா அப்படிச் செய்தான்?” என்று ஆசிரியர் வியப்புடன் வினவினார்.
“உலக வெப்ப நிலை அதிகரிக்க காரணம் என்ன?” என ஆராயப்படுகிறது.
“கோயிலுக்கு வரச்சொல்லி என்னையா அழைத்தாய்?” என சுந்தரி ஆச்சரியத்துடன் கேட்டாள்
பின்வருவனவற்றுள் புறவினாவை ஏற்று வந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.
I அவன் III எது
II அவனா IV எதுவோ
I, II
II, III
II, IV
III, IV
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது அகவினா அல்ல?
எவன்
எவர்
எவனோ
எப்படி
பின்வரும் வாக்கியங்களில் புறவினாச் சொல்லை ஏற்று வராத வாக்கியத்தைத் தெரிவு செய்க?
அவளா அப்படிக் கூறினாள்?
அவன் நல்லது தானே செய்தான்?
அவன் பார்ப்பதற்கு எப்படி இருப்பான்?
அவன்தானா அப்படிப் பேசின்னான்?
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது அகவினா அல்ல?
எவன்
எப்படி
எவனோ
எவர்
பின்வரும் எழுத்துகளில் எது வினாச் சொல்லின் முதலில் வராது?
எ
ஏ
யா
ஆ
பின்வரும் எழுத்துகளில் எது வினாச் சொல்லின் இறுதியில் வராது?
ஆ
ஓ
எ
ஏ
மிகச்சரியான விடையைத் தெரிவு செய்க.
அப்பள்ளி - அகச்சுட்டு
இவள் - புறச்சுட்டு
எதற்கு - அகவினா
யாவை - புறவினா
சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகள் யாவை?
அ, ஓ, எ
ஆ, ஓ, எ
எ, ஏ, யா
ஆ, ஓ, யா
சொல்லுக்கு முதலில் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?
ஆ
ஏ
யா
ஓ
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் அகவினா சொற்களைத் தெரிவு செய்க.
I ஒட்டுமா III ஏது
II எவன் IV அவளோ
I, III
I, IV
II, III
II, IV
கீழ்க்காண்பவை ________________ ஆகும்.
[எப்படி ஏன் யாவை]
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா
புறவினா
